June 07, 2017

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்ப, கட்டார் நிதியுதவி - பொது­ ப­ல­சே­னா

-ARA.Fareel-

கட்டார் இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஓர் முஸ்லிம் அமைச்சர் மூலம் நிதி உதவி வழங்கி வரு­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் முறை­யிட்டு வந்­தமை இன்று உறு­தி­யாகி விட்­டது.

கட்­டா­ரி­லி­ருந்து பெறப்­பட்ட பணம் தீவி­ர­வா­தத்­துக்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

நேற்று ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், முன்னாள் ஜனா­தி­ப­திக்கு கட்­டா­ரி­யி­லி­ருந்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மூலம் கிடைத்து வரும் நிதி உதவி பற்றி விளக்­க­மாக கடிதம் ஒன்று எழு­தி­யி­ருந்தோம்.

வில்­பத்து குடி­யேற்­றங்கள் பற்றி முறை­யிட்­டி­ருந்தோம்.

இந்த நிதி­யு­தவி உடன்­ப­டிக்­கையில் அர­சாங்கம் கையொப்­ப­மி­ட­வில்லை. நிதி­யு­தவி அர­சாங்­கத்தின் ஊடாக வழங்­கப்­ப­ட­வு­மில்லை. வில்­பத்­து­வுடன் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சரே கையொப்­ப­மிட்டார்.

அந்த அமைச்சர் மஹிந்­த­ரா­ஜபக் ஷ காலத்தில் வகித்த அதே அமைச்சுப் பத­வி­யையே தற்­போ­தைய அர­சிலும் வகிக்­கிறார்.

கட்டார் உலக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. நிதியுதவிகளை வழங்கி வருகிறது என்பது இப்போது உறுதியாகி விட்டது என்றார்.

8 கருத்துரைகள்:

அடா முட்டாள் சம்மத்தப்பட்ட அமைச்சர்தான் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவார் முஸ்லிம்கள் மீது அவதூறு செலுத்துவதற்கா வேண்டியே நீங்கள் பிறந்து இருக்கின்றீர்கள்.

Hiiii Hiiii Hiiiii....
Jockers of the modern world

கட்டார் வளர்த்த தீவிரவாதம் இலங்கையில் எங்கே உள்ளது? மடயனுக்கு பேயன் வழி காட்டி மாதிரி இருக்கு

உலக வரலாற்றில் கோட்டை கொத்தளங்கள் இன்றி நீதியான நேர்த்தியான தன்னிறைவான ஊழல் மோசடி இல்லாத , கிழக்கிலிருந்து மேற்குவரை ஆட்சி செய்தது இஸ்லாம் மட்டுமே என்பதை யாவரும் அறிவர். இதற்கு அடிப்படையாக இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றிய முகம்மது நபி(ஸல்)அவர்களும் அவருடைய அனபுத் தோழர்களும் அமைந்தனர். குறிப்பாக உமர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் மீண்டுவராதா என எல்லா மதத்தவர்களும் ஏங்கித்தவிக்கின்றனர்.
இஸ்லாத்தை அஅரைகுறையாக பின்பற்றியவர்களது ஆட்சி ஊழலும் குழப்பமும் நிறைந்ததாக காணப்படுகிறது. இதே நிலைதான் சமூக மட்டத்திலும் காணப்படுகிறது. எனவே முழுமையான வாழ்க்கைத் திட்டத்தை கொண்ட இஸ்லாத்தை தீவிரமாகவும் முழுமையாகவும் பின்பற்றுவதன் மூலமே முழு உலகமும் (எம்மத்தத்தை சார்ந்தவராயினும்) நிம்மதியடைவர்.
எனவே முஸ்லிம்களே இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றுங்கள். மாறாக மருந்தாக கூட தீவிரவாதத்தை பின்பற்றிவிடாதீர்கள்.

ரெம்ப கஷ்டப்பட்டு இந்த உண்மையை கண்டு பிடிச்சிறுப்பரோ

BBS may act like mental... but their masters (or directors) try to collect whatever piece of opportunity to justify we sri lanka muslims also are terrorists and to harm us with justifications to the world (who car in real?)!

we don't worry until our duas are towards almighty Allah, the one & only greatest God!

You are correct, please make a public announcement, by calling all media. I thing Colombo fort railway station is better.

Post a Comment