June 14, 2017

ஞானசாரரை உருவாக்கியது யார்? ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் - ரிஷாட்

-சுஐப் எம் காசிம்-

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

”ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்” என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்திருக்கும் கூற்றுத் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாட் குடியேற்றியதனாலேயே ஞானசார தேரர் உருவாகினார் என்று பொருப்பற்ற வகையில் கூறியிருக்கும் கருத்து எல்லோரையும் முட்டாளாக்கும் செயல் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியை முஸ்லிம்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்து, தங்களது தலைவரை பிரதமராக்கியதற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனும் கைமாறுமா இது? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் அவர்கள் சார்ந்த சிவில் அமைப்புக்களும் இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டுவந்தமைக்கு கிடைக்கின்ற பரிசு தான் இது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் பல மில்லியன் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. ”வயர் ஷோர்ட்” என்றும் ”இன்ஷூரன்ஸ் தந்திரோபாயம்” என்றும் சட்டத்தைப் பாதுகாப்பவர்கள் இன்னும் கூறிக்கொண்டு குற்றவாளிகளை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் பொறுமையின் உச்ச கட்டத்தில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் உங்களது கூற்று வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று உள்ளது.

உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத புதுமை ஒன்றைத்தான் இந்த நாட்டிலே நாங்கள் காண்கின்றோம். முஸ்லிம்களின் அழிவுகள் குறித்து நாங்கள் பேசும் போது எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்துகின்றீர்கள். நாங்கள் ஊமைகளாக, பேசா மடந்தைகளாக இருக்க வேண்டுமென்றா இன்னும் எதிர்பார்க்கின்றீர்கள்?

வில்பத்தை யார் அழித்தார்கள்? ஞானசாரரை யார் உருவாக்கினார்கள் என்ற விடயங்களை உங்கள் தலைவரிடம் நீங்கள் கேட்டுத்தெரிந்த பின்னர் அவை பற்றி பேசுங்கள். இந்த விடயங்களை நீங்கள், நீங்களாகவே பேசவில்லை. உங்களை யாரோ பேச வைத்திருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

6 கருத்துரைகள்:

"THE MUSLIM VOICE" STATES THAT IF MINISTER RISHAD BATHIUDEEN HAS THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, THE PM AND PRESIDENT MAITHRIPALA SIRISENA, MINISTER RISHAD BATHIUDEEN SHOULD RESIGN FROM THE POST OF MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A PROTEST.
Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for their personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".

Super reply!!! excellent!
மிகச்சரியான, தெளிவான பதில்!

என் மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களே,

நம் சமூகத்தின் மீது உங்களுக்கள்ள கரிசனை எமக்கு புரிகிறது.

பாராளுமன்றம்,அமைச்சரவை முதல் பட்டிதொட்டி வரை நீங்கள் தைரியமாக முஸ்லிம்கள் படும் இன்னல்களை எதிர்த்து குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றீர்கள்..!

நம் பிரதமர், ஜனாதிபதி
மற்றும் அரசாங்கம் இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எமக்கு மிகுந்த வேதனையையும்,
அரசின் மேல் பலத்த
சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த நல்லாட்சியைக் கொண்டுவர முதலாவதாக முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் நீங்கள் பட்ட பாடுகளை மக்கள் அறிவார்கள். அன்றைய ஆளுங்கட்சியை விட்டு விலகி, இந்தப்பக்கம் வந்த முதல் ஆளாக நீங்கள் இருக்கிறீர்கள்.அதை யாரும் மறக்கவில்லை.

இந்த நல்லாட்சியில் சிறுபான்மை மக்கள் அனைவரும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறர்கள்.

உங்கள் அமைச்சினுள்ளும் அமச்சர் மனோ கணேசன் அவர்களின் அமைச்சினுள்ளும் அத்துமீறிப் பிரேசித்த ஞானசார தேரருக்கெதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. அவர் மூலம் எவ்வளவோ இதுவரை நடந்துள்ளது, ஆனால்
இதுவரை எந்தச் சட்டமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இல்லை.

சியோனிஷ சக்திகளின் அடிவருடிகளாக செயல்படும் ஒரு நிலைமை தெண்படுகிறது.

எந்த நேரத்திலும் இந்த அமைச்சுப் பதவியைத் தூக்கி வீசத் தயாராகவே
இருக்கும் உங்களிடம்
ஒரு வேண்டுகோள்..! 👇👇

"ஏன் நாம் சிறுபான்மை
மக்கள் ஒன்றிணைந்து
ம.வி.முன்னணியுடன் (JVP)
பேச்சுவார்த்தை நடத்தி
கூட்டுச் சேர்ந்தால் என்ன..?"

இதுபற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்து ஏனையவர்களையும் இணைத்துக்கொண்டு காரியத்தில் இறங்குங்கள்..!

எல்லாம் வல்ல இறைவன் உதவியுடன் அடுத்த அரசியல் புரட்சியைச் செய்து,
எம்மைக் கிள்ளுக் கீரைகளாக எண்ணி எள்ளிநகையாடும் இந்தக் கூட்டத்துக்கு மறக்க முடியாத பாடமொன்றைப் புகட்டுவோம்.

அரசியலில் எதுவும் நடக்கலாம்..!

ஏன் கீரியும் பாம்புமாய் இருந்தவர்கள் இன்று
நம் சிறுபான்மை
தயவினால் ஒன்றாக
இணைந்து ஆட்சி நடத்தவில்லையா..??

எம் ( சிறுபான்மை) முதுகில்
ஏறி ஆட்சியைப் பிடித்தபின் எம்முதுகில் குத்தவில்லையா..?

ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளுக்கு தகுந்த
பாடம் கற்பிப்போம் என்று கர்ச்சித்தவர்கள் இப்போது பூனைக்குட்டிகளாக வேஷம் போடவில்லையா..??

தமிழர்களை அடக்கி
விட்டோம் இப்போது
மீதமுள்ள முஸ்லிம்களையும்
ஒரு கை பார்த்து விடுவோம் என்று எண்ணிச் செயற்படவில்லையா..??

இவையெல்லாம் இந்த அரசியலில் சகஜம்..!

இந்நாட்டில் எத்தனையோ ஆட்சிகளை மாற்றிய எமக்கு,
இந்த ஆட்சியையும் மாற்றுவதொன்றும்
பெரிய காரியமல்ல..!

எம்மை வஞ்சித்தவர்களுக்கு
இதைவிட ஒரு பாடம்
இல்லை கற்பிப்பதற்கு..!

ம.வி.மு ( J.V.P )க்கு ஆட்சியமைக்க ஒரு சந்தர்ப்பத்தை சிறுபான்மையோராகிய
நாம் வழங்குவோம்.
அவர்கள் நீதியையும்
பார்ப்போம்..!

ஆயுதம் தூக்க வேண்டியதில்லை..!

முஸ்லிம்கள் -
'பயங்கரவாதிகள்'
என்று முத்திரை குத்த ஆசையோடு காத்திருக்கும்
யூத அடிவருடிகளின் எண்ணங்களில்
மண்ணைத் தூவுவதற்கான
ஒரு சந்தர்ப்மாக இதை
எண்ணி காரியத்தில் இறங்குவோம்..!!

வெற்றி நிச்சயம்..!!

<=><=><=><=><=><=><=>

If Muslims are expected or at least unwilling to
hit back , then that applies to everybody
including the MPs and ministers . Gnasara evading
court appearance is a result of major conspiracy
and happening with a strong backing . Who else
benefits from breaking the law and challenging it
with false pretexts by him ? Who wants to play
with the country's law and order ? Only one party
is playing fool with the country and that is the
SLFP with Mahinda leading one faction and My3 the
other , joining the UNP . And now it has become
easy for all of them to target Muslims for their
game . THEY ARE LIKE THE FANS WATCHING BULL FIGHT
IN SPAIN .THEY ENJOY IT . THERE ARE 150 TYPES OF
CANCER AND SOME ARE CURABLE AND SOME ARE NOT
WHILE THE REST HAVE A FIXED SHELF LIFE . DO NOT
WASTE YOUR TIME . START DIAGNOSIS . NO DELAY.

Yes, JVP... they are the third and final power to give an opportunity to bring peace in this island...

Post a Comment