Header Ads



பாலஸ்தீன குழந்தைக்கு பால்கொடுத்த யூத பெண் - சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்தது


விபத்து ஒன்றில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீன முஸ்லிம் பெண்ணொருவரின் 9 மாத ஆண் குழந்தைக்கு இஸ்ரேல் இனத்தவரான யூத செவிலியர் பாலூட்டிய சம்பவம் உலகில் மக்களின் மனதை வென்றெடுத்துள்ளது.

உலா ஒக்ஸ்ட்ரோவிஸ்க் சக் என இந்த யூத இன செவிலியரும் குழந்தை ஒன்றின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன பெண், அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இஸ்ரேல் நாட்டின் இன் கரீம் பகுதியில் வாகன விபத்தில் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார், அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

உடனடியாக செயற்பட்ட இஸ்ரேலிய மருத்துவ உதவியாளர்கள் படுகாயமடைந்திருந்த பெண் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் ஹதாஸ் எலின் கரீம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதும் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு உலா ஒக்ஸ்டேராவிஸ்க் சக் என்ற செவிலிய பெண்மணியிடம் வழங்கப்பட்டது.

குழந்தைக்கு புட்டி பால் ஊட்ட அவர் பல மணிநேரம் முயற்சித்துள்ளார். முயற்சி தோல்வியடைந்ததால், அவரே குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.

விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் விபத்துக்கு உள்ளான பெண்ணின் மூத்த சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

பாலஸ்தீன இனத்தவர்களான குடும்பத்தினர், செவிலியரின் செயலை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். அதனை தாங்கிக்கொள்ள முடியாது, குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

எவ்வாறாயினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள குழந்தைக்கு பாலூட்டிய யூத செவிலியர், தான் குழந்தைக்கு 5 தடவைகள் பாலூட்டியதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அனைவரது மனதிலும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் குழந்தையை பாராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. தாய்மை
    முஸ்லிம்களைப் பற்றி அறிந்தவரோ தெரியாது

    ReplyDelete
  2. She is a really mother. I hope and wish almighty Allah will show the correct path to this sister Inhsa Allah

    ReplyDelete
  3. இங்கு ஒரு விடயம் சொல்லியே ஆக வேண்டும் யூதர்களிலும் ,ஈரானிய சிய்யாக்களிலும் பல பல பிரிவுகள் இருக்கின்றன அவர்கள் எல்லோரும் கெட்டவர்களில்லை அது நாங்க எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.எமது நாட்டில் உள்ளவர்களுக்கு அது எல்லாம் விளங்காது ஷியா ,யூதர்கள் என்றால் அவர்கள் எல்லோரும் தீயவர்கள் என்று தான் உடனே எடை போடுவார்கள்.

    இந்த யூத தாய் பாருங்கள் அவங்க இந்த குழந்தைக்கு பால் கொடுக்காமல் விட்டிருக்கவும் முடியும் ஏன் என்றால் இது ஒரு முஸ்லீம் குழந்தையென்று ஆனால் அவர்களிலும் நல்ல குணமுள்ள மக்களும் இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  4. யூதனும் கிறிஸ்தவனும் நமது எதிரிகள் எனும் நஞ்சை வஹாபிசத்தின் பெயரால் விதைத்த வஹாபிச ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவினதும் இஷ்ரேலினதும் கால்களில் தஞ்சம்...

    ReplyDelete
    Replies
    1. Abdul majeed Quran தெரியாமல் கதைக்கும் முட்டாளா நீங்கள்?

      Delete

Powered by Blogger.