Header Ads



முஸ்லிம்களுடன் இணைந்துகொள்வது, எனது பாக்கியம் ஆகும் - மஹிந்த

“ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இலங்கை முஸ்லிம்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து க்கொள்கின்றேன்” என்று, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது நோன்புபெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

அச்செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,   

“நோன்புக்கும் புன்னிய காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ரமழான் மாதத்தின் முடிவை இந்தத் திருநாள் கொண்டிருகின்றது. இந்த நோன்பு மாதம் ஆன்மீக விருத்திக்கு வாய்ப்பு அளிப்பதுடன், சுயகட்டுப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் உண்டாக்கும் மனோவலிமையையும் தருகின்றது. 

நோன்பானது தொழுகைக்கான மனநிலையை உண்டாக்குகின்றது முன்னைய வருடங்கள் போலவே, ரமழான் நோன்பை நிறைவு செய்யும் முஸ்லிம்களுடன் இணைந்துகொள்வது எனது பாக்கியம் ஆகும். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் சகல இலங்கை முஸ்லிம்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. That's right! You well aware how they are being fooled so elegantly in the country and all around the world.

    May you dream to fool Muslims like you did before but not Tamils.

    Your chance to become a President/Prime Minister even with the full support of some senseless Muslims is VOID. Void because there is no room to even talk about it without Tamils' participation in it and it is crystal clear Tamil will never participate in it as Ranil is getting them almost all they wanted/want.

    ReplyDelete

Powered by Blogger.