Header Ads



ஞானசாரரை கைது செய்வது, மிகவும் கடினம் - ராஜித சேனாரத்ன

கடந்த ஆட்சியின் போது வடக்கில் இளைஞர்கள் கடத்தப்பட்டது போன்று இப்போது நடைபெறுவது இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -14- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்களைப் போன்று இப்போதைய ஆட்சியில் நடைபெறவில்லை. பல விடயங்களுக்குத் தீர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று வடக்கில் இப்போது கடத்தல்கள் இடம்பெறவில்லை. அங்குள்ள தாய்மார்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மைகள் தெரியவரும்.

ஞானசாரரரைப் போன்று ஒளிந்துள்ளவர்களைக் கைது செய்வது மிகவும் கடினம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த கால ஆட்சியில் அளுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் குறித்து இப்போது விசாரணைகள் செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் இது தொடர்பில் அப்போதைய ஆட்சியில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அண்மையில் மகரகமையில் இடம்பெற்ற முஸ்லிம் கடை எரிப்புச் சம்பவங்கள் தொடர்பிலும் கைதுகள் நடைபெற்றுள்ளன.

ஞானசாரரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

3 comments:

  1. Lame excuse, you (Yahapalanaya) will have to pay the price for these.

    ReplyDelete
  2. Good governance! The Law is hiding, not Gnanasara.

    ReplyDelete
  3. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை இப்போதும் இடம்பெறுகின்றன... இதனை தடை செய்யத்தான் நாங்கள் இந்த ஆட்சியை ஆதரித்தோம். மிக்க நன்றி உங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு...

    ReplyDelete

Powered by Blogger.