Header Ads



முஸ்­லிம்­க­ளை, அமை­தி­யாக இருங்கள் என கூறக்கூடாது - ஹஸனலி

 
-ARA.Fareel-

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நாட்டில் தற்­போது அரங்­கேற்­றப்­பட்டு வரும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் வாதிகள் மீது நம்­பிக்கை வைத்து, உலமா சபை உட்­பட முஸ்லிம் சிவில் அமைப்­புகள் மக்­களை அமை­தி­யாக இருங்கள் என்று கூறிக் கொண்­டி­ருக்கக் கூடாது.

முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தனித்து களத்தில் இறங்கி அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் எரி­யூட்­டப்­ப­டு­கின்­றமை, பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்­பி­லான சமூ­கத்தின் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது பற்றி கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத செயல்­களை தூண்­டி­விடும் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரரை பாது­காப்பு பிரி­வி­னரால் இது­வரை தேடிக் கண்­டு­பி­டிக்க முடி­யாமற் போயுள்­ளது. நீதி­மன்­றுக்கு ஆஜ­ரா­காது பொய்க்­கா­ர­ணங்கள் கூறப்­பட்­டுள்­ளன. சுக­யீ­ன­மாக இருப்­ப­தா­கவும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டு­ள்ளதா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் இறை­யாண்மை உள்ள அர­சாங்­க­மாக காணப்­ப­ட­வில்லை.

தற்­போ­தைய அர­சாங்கம் இன­வாதம் சம்­பந்­த­மான எந்தக் குற்­ற­ங்க­ளுக்கும் நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்­திலும் இந் நிலைமை நிரூ­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் முஸ்லிம் சிவில் அமைப்­புகள் அர­சாங்­கத்தை பிர­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் மீது நம்­பிக்கை வைக்­காது அவர்கள் கூறு­வது போன்று தொடர்ந்து பொறுமை காக்­காது தனித்து களத்தில் இறங்க வேண்டும். 

தொடர்ந்தும் பொறுமை காக்க முடி­யாது. பொறுமை இழந்தால் நடக்கும் சம்­ப­வங்­களை எவ­ராலும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமற் போகும். இவ்­வா­றான அசம்­பா­வித நிலைமை ஏற்­பட்டால் அறிக்கை விடு­ப­வர்­களும் அமை­தி­யாக இருக்­கும்­படி கூறு­ப­வர்­க­ளுமே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

வர­லாற்­றினை நோக்­கினால் தமி­ழர்­களின் போராட்­டமும் இவ்­வாறே உரு­வா­னது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களில் சர்­வ­தேச பின்­னணி உள்­ளது என பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான கருத்துகள் தெரிவிப்பது அமைச்சர் சம்பிக்க ரணவக்க. இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அமையும். எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தீரயோசித்து கருத்துகளை வெளியிட வேண்டும் என்றார்.

3 comments:

  1. இப்போதைய சூழ்நிலையில் அமைதி காப்பதுதான்
    சிறந்த வழி..!

    முஸ்லிம்களுக்கு எதிராக சர்வதேச சதியொன்று அரங்கேற்றப்பட ஒத்திகை நடக்கிறது.

    முஸ்லிம்களை ஆத்திரமூட்டி அவர்களை ஆயுதமேந்த வைத்து பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டுவதற்கு சியோனிஷ சூழ்ச்சி நடக்கிறது..!

    இதை அனைவரும் புரிந்து கொண்டு புத்தியுடன் பொறுமை காக்க வேண்டும்..!

    IS IS என்றும் அது இலங்கையில் இருக்கிறது என்றும் என்றுமில்லாத அளவுக்கு அண்மைய சில நாட்கள் தொட்டு இனவாதிகள் சத்தம் போடுவது எதற்காக என்று யாரும் சிந்திப்பதாக இல்லை.

    எம்மை சீண்டிவிட்டு எங்காவது ஒரு இடத்தில் தொடங்கி கலவரத்தை உண்டாக்கி விட்டு அதை நாடு பூராகவும் பெருங் கலவரமாக மாற்ற யூத சூழ்ச்சி நடக்கிறது. நாம் அமைதியாக இருப்பதுதான் புத்தி என்பதை உணர வேண்டும்.

    இதைவிட்டு விட்டு, நாய் நம்மைக் கடிக்கிறது என்று நாமும் பழிக்குப் பழி
    என்று நாயைக் திருப்பிக் கடிக்கலாமா..??

    இந்த விடயத்தில் நாம் சிந்தித்து
    செயல்பட வேண்டும்.

    ஆயுதம் ஏந்தி நம்மால்
    வெற்றி பெற முடியுமா..?

    அவ்வளவு வசதி,வாய்ப்புகள் மேற்கத்திய ஆதரவுகள்
    இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி வெற்றி பெற்றார்களா..??
    ஈற்றில் என்ன நடந்தது..???

    ஆயுதப் போராட்டம் தேவையற்றது. அதில் நம்பிக்கை வைப்பதில் அர்த்தமில்லை..!!

    அமைதிப் போராட்டமே
    சிறந்த வழி..!
    அரசியல் போராட்டம்
    அடுத்த வழி..!!
    பொறுமை காப்பது வெற்றிக்கு
    உகந்த வழி..!!
    எமது அரசியல் பாதையை மாற்றுவது எல்லா சிறுபான்மைக்கும் ஏற்ற வழி..!!

    (தொடர்ச்சி அடுத்த comment இல் தொடரும்)

    ReplyDelete
  2. 👇👇🏿👇👇🏿👇👇🏿

    இந்த இக்கட்டான காலகட்டத்தில் இப்படி நாம்
    அதாவது 'சிறுபான்மை மக்கள்'
    சிந்தித்தால் என்ன..??

    இன,மத,
    மொழிப்பாகுபாடுகள்
    அறவே அற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ;
    இலங்கையின் ஓரங்கட்ட முடியாத உன்னதமான -
    ஒரே கொள்கையுடன்
    இயங்கும் அரசியல் சக்தியான
    'மக்கள் விடுதலை முன்னணி' பக்கம் நம்மவர்கள்
    அதாவது சிறுபான்மையினர்
    தம் பார்வையைச்
    செலுத்தினால் என்ன..??

    பேரீச்சம் பழ வரி முதல் அவ்வப்போது எமக்காக சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில் நாம் கோரிக்கை விடுக்காமலே
    குரல் கொடுக்கும் அவர்கள் நமக்கு நிச்சயம் உதவுவார்கள்..!

    'இலங்கையில் பிறந்த அனைவரும்
    சம உரிமையுடன்
    சம நீதியுடன் நடத்தப்பட வேண்டும்
    என்ற கொள்கையை
    அடிப்படையாகக் கொண்டு
    இயங்குபவர்கள்..!!'

    JVP எனும்
    மக்கள் விடுதலை முன்னணியுடன்
    பேச்சுவார்த்தைகள் நடாத்துவதன்
    மூலம், நம் சிறுபான்மை சமூகத்துக்கு
    விமோசனத்தையும், பாதுகாப்பையும்
    நிச்சயம் உறுதி செய்ய முடியும்..!!

    அதன் பிறகு இந்த நாட்டில்
    சிறுபான்மையினருக்கு எதிராக
    எந்தப் பிரச்சினையும் நடக்காது
    என்று நம்பலாம்.

    'அடம்பன் கொடியும்
    திரண்டால் மிடுக்கு' என்று
    சும்மாவா சொன்னார்கள்..!!

    சிந்திப்போமா..? செயல் படுவோமா..??

    " பூமியை வெல்ல
    ஆயுதம் எதற்கு..?
    பூப்பறிக்க
    கோடரி எதற்கு..?
    பொன்னோ பொருளோ
    'போர்க்களம்'
    எதற்கு..??
    'ஆசை' துறந்தால்'
    அகிலம்' உனக்கு "

    ஆம், சொகுசு வாழ்க்கையை
    விரும்பும் இந்த சாக்கடை
    சுய நல அரசியலை அப்படி
    இலேசாக நம்
    அரசியல்வாதிகள்
    விட்டுவிட மாட்டார்கள்.

    அப்படிப்பட்ட சுயநலமிகளை
    ஓரங்கட்டிவிட்டு மக்களாகிய
    நாம் அனவரும் ஒன்று சேர்ந்து
    சிந்தித்து சீக்கிரமே ஒரு நல்ல
    முடிவை எடுப்போம்..!

    ஒன்றை மட்டும் ஞாபகம்
    வைத்துக் கொள்ளுங்கள்..!

    இந்த மைத்திரியோ, ரனிலோ,
    மகிந்தயோ அல்லது
    அரபு ( முஸ்லிம்) நாடுகளோ
    நம்மைப் பாதுகாப்பார்கள்
    என்று மட்டும் நம்ப வேண்டாம்..!

    அவர்கள் அனைவரும்
    முஸ்லிம்களை அழிக்கக்
    கங்கணம் கட்டிக்
    கொண்டு இயங்கும்,
    இஸ்லாத்துக்கு எதிரான
    சக்திகளுடன் கை
    கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உலக அளவில்
    முஸ்லிம்களுக்கு அநியாயங்களும்,
    அட்டூழியங்களும்
    திட்டமிட்ட அடிப்படையில்
    அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

    இலங்கையும் விதிவிலக்கல்ல..!

    இவ்வளவும் நடப்பது,
    எம்மை சீண்டுவதற்கும்,
    அதன் மூலம்
    ஒரு பெரிய கலவரத்தை
    உண்டுபண்ணி
    எம்மையும் எமது
    பொருளாதாரத்தையும்
    அழிப்பதும்தான்
    (இந்த இனவாதிகளின்)
    குறிக்கோள்..!

    இதற்கு சியோனிஷ (யூத)
    சக்திகளின் பலமான ஆதரவுண்டு.
    நல்லாட்சியோ, நம் அரசியல்
    தலைமைகளோ இந்தச்
    சதித் திட்டங்களை நிறுத்த முடியாது.
    தலைக்கு மேலே வெள்ளம்
    போகிறது..!

    நாம் இன்னும் வேடிக்கை
    பார்த்துக் கொண்டிருந்தால்
    நாளொரு மேனி,
    பொழுதொரு வண்ணமாக
    எமது உடமைகள்
    அழிக்கப்படும்,
    ஏன் உயிர்களின்
    அழிவும் ஆரம்பமாகும்..!

    இன்று அங்கு,
    நாளை இங்கு
    மறுநாள் எங்கும்..!!

    "சுவர் இருந்தால்தான்
    சித்திரம் தீட்டலாம்"

    "சிந்தித்து அவசரமாக
    முடிவெடுக்கும்
    தருணம் இது"

    "வாழை மலர் போல
    பூமி முகம் பார்க்கும்
    'கோழைக் குணம்'
    மாற்று தோழா..!

    நாளை உயிர் போகும்,
    இன்று போனாலும்
    'கொள்கை நிறைவேற்று'
    தோழா..!!"

    சிந்திப்போம், இனியும்
    பார்த்துக் கொண்டிருக்காமல்
    உடனே அவர்களுடன் (JVP)
    பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்.

    நமது இந்த முடிவு,
    இந்த நாட்டில் மட்டுமல்ல,
    உலக அளவில் மெச்சப்படும்-
    பாராட்டப்படும்,
    இலங்கை அரசியலில்
    மாபெரும் அரசியல்
    புரட்சியை ஏற்படுத்தும்..!

    ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

    ReplyDelete
  3. "THE MUSLIM VOICE" FULLY SUPPORTS THIS POLITICAL VISION OF FORMER SECRETRAY GENERAL OF THE SLMC, MINISTER & MP brother HASSANALI.

    A VALUABLE ADVICE BELOW TO SRI LANKAN MUSLIMS, In Shaa Allah.
    ”The powerless should not accept their powerlessness. They may not succeed in getting power but they can fight for it, and if enough fight for it, it makes it very difficult for the people with the big sticks.”
    Jane Jacobs . American-Canadian journalist, author, and activist.

    Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (In Shaa Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us the Muslims in this plight.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.