June 13, 2017

முஸ்லிம்கள் பொறுமையாக இருப்பது, பெரிய விடயம் - அமைச்சர் மங்கள சமரவீர

முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாத அட்டூழியங்களை கண்டித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் உணர முடிந்துள்ளதாக அறியவருகின்றது. 

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதி தலைமையில் வாராந்த அமைச்சரவை கூட்டம் இன்று -13- காலை இடம்பெற்றது.

இதன்போது, வெளிநாட்டு அமைச்சர் ரவி கருணாநாயக்க- மதங்களுக்கிடையில் இன நல்லுறவை பாதிக்கும் சம்பவங்கள் , நாட்டின் இஸ்திர தண்மைக்கு ஆபத்தானது. மக்களின் பாதுகாப்புக்கும் இந்த நிலை உகந்ததல்ல.

எந்த மதத்தினர் என்றாலும் அடுத்த மதத்தினருக்கு இடையூறு ஏட்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இது நாட்டினது வெளி உறவுக்கும் பாதிப்பை ஏட்படுத்தும் . 

இதனை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பொதுவான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.

இது தொடர்பில் கருத்து வெளிப்படுத்திய அமைச்சர் மங்கள சமரவீர- முஸ்லிம்கள் இந்தளவுக்கு பொறுமையாக இருப்பது பெரிய விடயம். அவர்களின் பொறுமையை சோதிக்காமல் இனவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

வழமைக்கு மாறாக பல சிங்கள சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் - அமைச்சரவை பத்திரத்துக்கு ஆதரவாகவும் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும் கருத்து வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜனாதிபதி செயலக தகவல்களின் படி, இனவாதத்தை துடைத்தெறிய வேண்டும் என பல பெரும்பான்மை இன அமைச்சர்கள் கருத்து வெளிப்படுத்திய கூட்டமாக இன்றெய அமைச்சரவை கூட்டத்தையே பார்க்க முடிந்ததாக சுட்டிக்காட்டினர்.

அத்துடன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் அண்மையில் ஆற்றிய உரையின் எதிரொலியாகவே இந்த அமைச்சரவை பாத்திரத்தையும் சிங்கள அமைச்சர்களின் இனவாதத்துக்கு எதிரான கருத்தையும் பார்க்க முடிவதாகவும் தகவல் வெளிப்படுத்திய அதிகாரிகள் கோடிட்டு காட்டினர்.

இறுதியில் உரையாற்றிய ஜனாதிபதி, இதனை அரசுதான் செய்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது எனக்கூறியபோது- விமல் வீரவன்சவும் அப்பிடித்தான் கூறுகின்றார் என சில அமைச்சர்கள் அப்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

உண்மையில் - அமைச்சர் ரவியின் இன்றய அமைச்சரவை பாத்திரம் அதி முக்கியத்துவம் மிக்கது மட்டுமன்றி , முஸ்லிம்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கக்கூடியதும் ஆகும்.


8 கருத்துரைகள்:

இதுதான் பெரும்பாலான சிங்களவர்களின் மனநிலை. ஆனால் வழக்கம்போல முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் எப்படியாவது ஒரு ஆட்டத்தை காணவேண்டுமண்டு ஆவலோடு காத்திருந்த சில தமிழ் தீவிரவாதிகளுக்கு இது பெரிய ஏமாற்றம் தான்

பெரும்பான்மை சமூக மட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்பான நல்லெண்ணம் மேலும் வலுவுள்ளதாக அமைய ஐவேளையும் பிரார்த்திப்போம்.

Acting. .....we are not ready believe

ஹாய் ரிஸாட்டிக்கு நல்ல பேரு.. சாணக்கியத்திற்கு ஆப்பு... இத வைத்து இந்த படம் நல்லா ஓடும்... எல்லாம் சரி நம்ம அதிமேதகு ஜனாதிபதி யின் முடிவு என்ன.? Facebook ல கொமன்ட் பன்னியவன கைது செய்து சிறையில் அடைக்க முடியும் ஆனால் அல்லாஹ் வையும் நபி அவர்களையும் மிக கேவலமான முறையில் பேசிய சொறி நாய் ஜானசாரவ கைது செய்ய முடியாது... ஆனால் அவனை கைது செய்ய நாலு போலிஸ் பிரிவு நாடகம். இந்த நாடகம் மொகா தொடர்.. அந்த சொறி நாயை கைது செய்து தண்டனை வழங்கப்படும் வரை இந்த ந(க)ல்லாட்சி கள்ள கூட்டத்தை இந்த சமூகம் நம்பாது. கடந்த இரண்டு மாதத்தில் எவ்வளவு இனவாத விஷயங்கள் நடந்துள்ளது...எதுவும் இந்த கள்ளக் கூட்டத்திற்கு தெரியவில்லையா? அவரு பாராளுமன்றத்தில் பேசிய பிறகுதான் அவர்களுக்கு தெரிய வந்ததாம்... நல்லதாகவே வக்காளத்து வாங்குகிறார்கள்... இதுவும் இந்த மெகா சீரியலில் ஒரு அங்கம்.. அடுத்த அங்கத்தில் சானக்கியமும் நடிப்பார். மற்றது இந்த சீரியலில் தலைமைகள் மாத்திரம் தான் நடிக்க முடியும். அவர்களின் வால்களுக்கு இடம் இல்லை... சவால் மன்னன் விளையாட்டு துறை, சுகாதார துறை, மாவட்ட அபிவிருத்தி, வீடமைப்பு துறை மற்றும் தபால், மீன்பிடி,மீள் குடியேற்றம் மற்றும் இதர உறுப்பினர்கள் அனைவரும் இஃதிகாப் இருக்காங்க... இது அனைத்தும் உங்களை எங்களின் அரசியல் தலைமைகள் என ஏற்றுக்கொண்டமைக்கான தண்டனை...யா அல்லாஹ் எங்களை மன்னித்து இந்த நயவஞ்சக கூட்டத்திலும் இருந்து பாதுகாப்பாயாக...

Government should find out who is operating this BBS and other racist groups. Where do they get funds from? Who is this Dilantha Withanage? It is widely known that Dilantha is the mastermind behind this ugly incidents. This guy will create many more Gnanasara in Sri Lanka if this is not looked into on time.

Control your tongue.
நாங்கள் பண்பாடு போதிக்க வந்த சமூகம். இந்த சொற்கள் எந்த positive விளைவையும் தராது.

Ik msஅவர்களே எதற்கு தேவை இல்லாமல் இதற்குல் அவர்களை இழுக்கிறீர்கள்.

Post a Comment