Header Ads



சல்மானின் மனதில், கத்தார் மக்களுக்கு இடம் உண்டாம்...!


மக்காவில் உள்ள புனித அல்-ஹரம் மசூதிக்கு செல்ல கத்தாரை சேர்ந்த சிலருக்கு தடை விதிக்கப்பட்டதாக அரபிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அல்-ஹரம் மசூதிக்கு செல்ல முயன்ற சிலர் தடுக்கப்பட்டதாக கத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் வந்ததாக கத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை மேற்கோள்காட்டி தோஹாவைச் சேர்ந்த அல்-ஷர்க் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டது.

"இது மனித உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சடங்குகளுக்கான உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற செயல்" என்று கத்தார் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அலி பின் ஷேக் அல் மர்ரி, அல்-ஷர்க் நாளிதழிடம் தெரிவித்தார்.

இது குறித்து செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், 

"செளதி அரசர் ஷா சல்மானின் இதயத்தில் இடம் பெற்றவர்கள் கத்தார் மக்கள்" என்று கூறப்படுள்ளது.

"கத்தார் நாட்டு மக்கள் செளதி அரேபிய மக்களின் சகோதரர்கள் போன்றவர்கள். செளதி அரசர், கத்தார் மற்றும் செளதி குடும்பங்களின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை கேட்கத் தயாராக உள்ளார்" என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற புகார்களை தெரிவிக்க, செளதி அரேபியா உள்துறை அமைச்சகம் ஹாட்லைன் எண்ணை வழங்கியுள்ளது. கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளிடையேயான உறவுகளில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுகிறது.

No comments

Powered by Blogger.