Header Ads



ஒரு நோன்பாளிக்கு, சிங்களவர் வழங்கிய மகத்தான கௌரவம் (உண்மைச் சம்பவம்)

இன்று இனவாதம் தலைதூக்கி காணப்படும் நிலையில் பௌத்தர்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் பௌத்தர்களையும் விரோதியாக பார்க்கின்ற இந்த காலத்தில் இன்று நடந்திருக்கும் சம்பவம் இரு சமூகத்தின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

இன்று பேருவளையில் முஸ்லிம் சகோதரர் சிங்கள சகோதரரின் முச்சக்கரவண்டியில் பயணித்த கொண்டிருக்கும் போது சிங்கள சகோதரரான ஜகத் புகைப்பிடித்திருந்தவேளை திடீர் என திரும்பி முஸ்லிம் சகோதரரைப் பார்த்து “நீங்கள் நோன்பு நோற்றுள்ளீரா?” என கேட்க முஸ்லிம் சகோதரர் ஆம் என பதிலளித்துள்ளார்.

இதற்கு திடீரென சிங்கள சகோதரர் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு “நீங்கள் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருங்கள் நான் வெளியில் இறங்கி புகைப் பிடித்து விட்டு வருகிறேன்” என கூறியுள்ளார். வெப்பம் அதிகமாக இருந்த அந்த வேளையில் கூட அவர் வெளியில் சென்று புகை பிடித்துள்ளார்.

பிறகு வந்து முஸ்லிம் சகோதரரிடம் நான் இறங்கி வெளியில் சென்றதற்கான காரணம் நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன், எனது புகைத்தலால் நோன்பாளியை பாதிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவோ செயற்பாடு நடைபெறும் போதும் இப்படி அனைத்து மதங்களையும் மதித்து எல்லா மனிதர்களுடனும் நல் உறவை பேணுபவர்களும் காணப்படுகின்றார்கள் என்பது முக்கிய அம்சம் ஒன்றாகும்.

மனித நேயம் மரணிக்கவில்லை

Fowmi KI + மீள்பார்வை

4 comments:

  1. We should also respect other's culture and religion. Respecting one's culture or religion does not necessarily mean we accept it.

    ReplyDelete
  2. So many Abu Thalib in srilanka
    Proof this inciedent

    ReplyDelete
  3. இலங்கையில் பொது இடங்களில் பொதுவாக பயணிகள் பயணம் செய்யும் வாகனங்களின் புகைத்தல் இலங்கையில் தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் நாம் அறிந்து வைத்திருப்பது நல்லது

    ReplyDelete
    Replies
    1. Good comment but not acceptable for this incident

      Delete

Powered by Blogger.