Header Ads



யானை தாக்கி, தேரர் பலி, பக்தர்கள் சிதறியோட்டம் - கட்­டானையில் சம்பவம்

கட்­டானை ஸ்ரீ வர்­த­னா­ராம விகா­ரையில் பொசன் பெர­ஹர நடை­பெற்றபோது பெர­ஹ­ரவில் கலந்து கொண்ட யானை ஒன்று  தாக்­கி­யதில் பௌத்த தேரர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.  

இச்­சம்­பவம் நேற்று  அதி­காலை 2 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வத்தில் கரம்பே ராஹுல தேர­ரரே  (26) உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

யானை குழப்­ப­ம­டைந்­த­தை­ய­டுத்து மக்கள் ஓட்டம் எடுத்த போது உயி­ரி­ழந்த தேரரை யானை தும்­பிக்­கையால் இழுத்து கீழே வீழ்த்தி காலால் மிதித்­துள்­ளது. 

பெர­ஹர சென்று கொண்­டி­ருந்­த­போது குறித்த தேரர் யானையின் வலது பக்­க­மாக  சென்று கொண்­டி­ருந்த போது சம்­பவம்  இடம்­பெற்­றுள்­ளது. 

சம்­ப­வத்­தை­ய­டுத்து காய­ம­டைந்த தேர­ரரை நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயி­ரி­ழந்­துள்­ளமை தெரிய வந்­தது.

தேரரின் சடலம்  நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் பிரேத பரி­சோ­த­னைக்­காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

3 comments:

  1. யானையிடம் விசாரனையா?

    வழிபாடு என்ற பெயரில் மிருகங்களை கூட்டி அலைவதை தடுத்தாலே போதுமானது.

    ReplyDelete
    Replies
    1. MR. Inman! மாற்று மத்தவர்களது வழிபாட்டு முறைகளை நாம் ஒருபோதும் கிண்டல் செய்யக்கூடாது. இஸ்லாம் அதனை அனுமதிக்கவுமில்லை. "லெக்கும் தீனுக்கும் வொலியதீன் " என தமக்குள் தாம் கூறிக்கொள்ள வேண்டியதுதான்.

      Delete
  2. Deepest sympathy for late young Buddhist monk

    ReplyDelete

Powered by Blogger.