Header Ads



வடதுருவம் நோக்கி நகரும் இலங்கை, மண் சரிவுக்கும் அதுவே காரணம் - பேராசிரியர் கபில

நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் கபில தஹாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடதுருவம் நோக்கிய நகர்வே அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த நகர்வின் அடிப்படையில் இலங்கை வருடாந்தம் 8 சென்றிமீற்றர் அளவில் வடதுருவத்தை நோக்கி நகர்கிறது.

இதன் ஊடாக மணல், கற்கள், களிமண், மற்றும் கூழாங்கற்கள் போன்றவை அடங்கிய படிமங்கள் உருவாக்கப்படுகின்றன.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவுகளின் போது, பாரிய கற்பாறைகளுக்கு பதிலாக இந்த படிமங்களில் இருந்து மணல் மற்றும் சிறுகற்களும் வெளியேற்றப்பட்டமையே இந்த கோட்பாட்டுக்கான ஆதாரம் என்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் கபில தஹாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், எமது இந்த கோட்பாட்டை இப்போதைக்கு யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.