Header Ads



பேஸ்புக்கில் முகமது நபியை, அவமதித்தவருக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் நாட்டில் முகமது நபிகளை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் இஸ்தான்பூலில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் Bahawalpur என்ற நகர் அமைந்துள்ளது.

இந்நகரில் வசித்து வந்த Taimoor Raza என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் நபர் ஒருவருடன் விவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது, இருவரின் விவாதமும் இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகளை பற்றி தொடங்கியுள்ளது.

கடவுள் மீது நம்பிக்கை இல்லாத அந்த நபர் முகமது நபிகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு பின்னர், நபருடன் உரையாடலில் ஈடுப்பட்டவர் பொலிஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.

மேலும், முகமது நபிகளை அவதூராக பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

பின்னர், பேஸ்புக்கில் முகமது நபிகளை அவமதிக்கும் வகையில் பேசிய நபருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு சட்டப்படி, இஸ்லாமிய மதத்தை பற்றி தவறாக பேசுவது, இறை தூதரை அவமதிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

மேலும், பாகிஸ்தான் நாட்டு வரலாற்றில் சமூக வலைத்தள உரையாடலில் முகமது நபிகளை அவமதித்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

Powered by Blogger.