Header Ads



ச 'தீ'


ச'தீ'
++++

க-கடையை எரி

கா-காடைத் தனம் புரி

கி-கிடைத்ததை சுருட்டு

கீ-கீழ்த்தரமாய் மிரட்டு

கு-குரோதம் பாட

கூ-கூட்டம் போடு.

கெ-கெட்ட வார்த்தைகளால்

கே-கேவலமாய்த் திட்டு

கை-கைதாக்க மாட்டார்கள்.

கொ-கொளுத்தவில்லை என்று

கோ- கோரஸாய் சொல்வார்கள்.

அ-அடாவடி செய்

ஆ-ஆண்டவனை ஏசு

இ-இனத் துவேசம் செய்

ஈ- ஈனத் தனம் புரி

உ - உண்மையை மறைத்து

ஊ - ஊளையிட்டுத் திரி

எ- எரித்து நாசமாக்க

ஏ- ஏவி விடு காடையரை

ஐ - ஐயறிவு நாய் போல

ஒ - ஒவ்வொரு அசைவிற்கும்

ஓ - ஓயாமல் குரை

உங்கள் ஆட்டங்கள்
ஒரு நாள் ஒழியும்
தீவைத்த பேய்கள்
தீவை விட்டோடும்

Mohamed Nizous

No comments

Powered by Blogger.