June 04, 2017

முஸ்லிம்கள் வியாபார சமூகம், என்பதிலிருந்து விடுபட வேண்டும் - ஹலீம்

-JM-Hafeez-

வர்த்தக முயற்சிகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுவது போல் கல்வியிலும் அதி கூடிய ஈடுபாடு காட்டுவதற்கு நம் சமூகம் முன் வருவதன் மூலம் நாடும் சமூகமும் சிறப்படையும் என்று முஸ்லிம் சமய விவகார தபால் துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

(3.6.2017) கண்டி பதியுதின் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக்க கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வைபவத்தில் முத்தாலிப் அபிவிருத்தி அமைப்பின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் 40 பேருக்கு மூன்று வருடங்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது. அவ்வைபவத்தில் அமைச்சர் அப்துல் ஹலீம் மேலும் தெரிவித்ததாவது-

இலங்கையைப் பொருத்தவரை முஸ்லிம்கள் வியாபாரச் சமூகம் என்ற தோற்றப்பாட்டடையே ஏற்படுத்தி வருகின்றனர். இது மாற்றப்படும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும்.  இலங்கை முஸ்லிம்கள் ஒரு கல்விச் சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டால் அனேக பிரச்சினைகளுக்கு தீர்வாகி விடும். கல்வியில் பின் நிற்பதே இன்றைய அநேக பிரச்சினைகளுக்கு முதற்படியாக அமைந்துள்ளது.

இன்று பௌத்த மக்களுக்கும்  முஸ்லிம் மக்களும் இடையே ஒரு பிரச்சினை இருப்பதாக நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை ஆராய்ந்து பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு குழு திட்டமிட்டு இதனைச் செய்வதை புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசியல் ரிதியாக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாக இதனைக் கருதலாம். அதாவது தற்போதைய ஆட்சியை இனவாதத்தின் மூலம் வீழ்த்துவதற்கு ஒரு குழு சூழ்ச்சி செய்வதாக கூறலாம். அத்துடன் முஸ்லிம்கள் மீது சிலருக்கள்ள போட்டி பொறாமை, காழ்புணர்ச்சி போன்ற அம்சங்களாகும்.

மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் அரசியல் பிரமுகர்களும், சமயத் தலைவர்களும் சேர்ந்து ஒரு பேச்சு வார்த்தை நடத்தினோம். வெகு விரைவாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட அங்கு இணக்கம் காணப்பட்டது.

காலத்துக்காலம் இவ்வாறான பிரச்சினைகள் தோன்று வதற்கு எம்மடையே போதியளவு புரிந்துணர்வு இல்லாமை ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டப் படுகிறது. எனவே நாம் இயன்றவரை சமனிலைத் தன்மை கொண்ட மனப்பான்மை யுடையோராக எம்மை மாற்றிக் கொள்வதன் ஊடாக அதனைச் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
     

9 கருத்துரைகள்:

Mr HALEEM PKS CONSIDER ABOUT YOUR OWN VILLAGE SCHOOLS ARE VERY BAD CONDITION .PLS DO SOMETHING IN THE FUTURE

I dont agree with you, Muslims are in good shape in Business & Education.. Remember one thing Education is not to get a Job, Its just knowledge to identify good and Bad..

முஸ்லிம்களின் கல்வியறிவு சமூக ஊடகங்களின் பின்னூட்டல்களை பார்க்கும்போதே விளங்குகின்றது!!!கட்டாயம் ஒவ்வோர் ஊரிலும் படித்தவர்கள் முன்வந்து இதற்கு முடிவு கட்ட வேண்டும்

Sathar ,

Our leaders don't have an iota of knowledge about
their community .They will tell you to stop business
when your business is attacked and they will tell
you to start farming when Muslim public servants are
attacked . And when you are in farming and get
attacked , they would tell you ' middle east is the
best place for you.'In their eyes we are just
DUMB , DEAF AND BLIND voters. True , Muslims are
now doing good in education ,mainly the girls but
not for understanding life values , just to find
a stupid man for marriage without dowry! Life
values are not taught in our schools or
universities . Schools and universities just
prepare the students for employment opportunities
with outdated courses and methods. Most of the
high ranking police are graduates but DIGs ASPs
SSPs and SDIGs are going Welikada to taste prison
foods ! Why ? Doctors are striking ! Why ?
There are still Teachers who are caning pupils
and punishing in many other ways ! Why ? All
because THE VALUE OF LIFE IS NOT TAUGHT THROUGH
AN ACCEPTED AND SUCCESSFUL PROCESS ANYWHERE IN
THE COUNTRY . ONCE UPON A TIME GOOD CULTURED
AND CIVILIZED PEOPLE LIVED IN THE COUNTRY AND
GENERATIONS AFTER GENERATIONS , SUCH PEOPLE ARE
GOING EXTINCT IN LARGE NUMBERS IN ALL THREE
MAJOR COMMUNITIES LEAVING ENOUGH SPACE FOR EVIL
ELEMENTS TO EMERGE . OUR LEADERS ARE THE FIRST
ONES TO TURN A BLIND EYE TO EMERGING REALITIES.

எமது அமைச்சர் அவர்கள் தன் சொந்த ஊரில் நிறைவான பொது வாசிகசாலை கூட இல்லாத நிலையில் கல்வியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதும், பிரச்சினைக்கு இவ்வாறானதொரு தீர்ப்பு சொல்லியிருப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இப்படிப்பட்ட ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக கிடைக்கப்பெற்றது வரம் என்பதா அல்லது சாபம் என்பதா என்பதை இலங்கை முஸ்லிம் சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். வியாபாரம் என்பது ஒரு அமல். ஹஸ்ரத் உமர் ரலி அவர்கள் வியாபாரத்தில் இருக்கும் போது மரணிக்க வேண்டும் அல்லது தொழுகையில் இருக்கும் போது மரணிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள்.
அடிமைகளாக, தனியார் நிறுவணங்களுக்கும், மிகைக்குறைந்த ஊதியத்தில் அரச தினைக்களங்களில் பணிசெய்வதை விட்டுவிட்டு வியாபாரங்களை தொடங்குங்கள், கம்பெனிகளை ஆரம்பியுங்கள். பத்தாம் தரம் படிக்கும் போதே என்ன துறைகளில் சுய தொழில் தொடங்கலாம், என்ன திட்டங்களை ஆரம்பித்தால், கல்வியைப் பூர்த்தி செய்யும்போது சுய தொழில் தொடங்க முடியும் என மாணவர்களுக்கு இக்கால கட்டத்தில் கருத்தரங்குகளும், ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உங்களின் மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ளாததொரு விடயமாகும். இன்று கல்வி கற்றவர்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் மட்டக்களப்பில் 100 நாட்களையும் தாண்டி நடந்து கொண்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டமாகும். அரசில் பணியாற்றும் எத்தனையோ நபர்கள், மாதாந்த ஊதியம் போதைமையினால் பகுதி நேர தொழிலாக வியாபாரம் செய்வது மற்றுமோர் உதாரணமாகும்.
இன்று முஸ்லிம் சமூகத்தில் முன்பு போல் இல்லாமல், பாரிய கல்வி வழற்சி ஏற்கனவே காணப்படுகின்றது. இவ்வாறான வளர்சிக்கு ஒர் உதாரணம்தான் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் கடந்த காலகட்டத்தில் சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டதும், பொது பல சேனா அவ்வாறு தெரிவு செய்யப்பட்டதற்காக போற்கொடி எழுப்பியதுமாகும். கல்வியில் அதிக ஈடுபாடு காட்டினால் நாடும் சமூகமும் சிறப்படையும் எனக்கூறும் நீங்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள். உயர்கல்வியில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களை உங்களுக்கு காட்ட முடியும்.

continue...
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே, கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக நீங்கள் பதவி வகிக்கின்றீர்கள். இந்த இரண்டு வருட காலத்தில் முஸ்லிம்களுக்கு நன்மை தரும் எத்தனை புதிய திட்டங்களை நீங்கள் உங்களின் அதிகாரத்தின் மூலமும், திணைக்களத்தின் மூலமும் கொண்டு வந்துள்ளீர்கள் எனக்கூற முடியுமா ?
பள்ளிவாயல்கள் நிர்வாகம் எவ்வாறு செய்யப்பட வேண்டும், பள்ளிவாயல்களுக்கான சொத்துக்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் போன்ற விடயங்கள் அடங்கிய கையேட்டைக் கூட இது வரை உங்கள் அலுவலகத்தினால் வெளியிட முடியவில்லை. பள்ளிவாயல்கள் தங்களின் விருப்பப்படி சொத்துக்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். பள்ளிவாயல்களுக்கு சொந்தமான எத்தனையோ நிலங்கள் முறையாக ஆவணப்படுத்தப்படாமலும், நில அளவை வரை படங்கள் இல்லாமலும் காணப்படுகின்றன. எமது சமூகம் எதிர்காலத்தில் எதிர் நோக்கவிருக்கும் மிகப்பெரிய சவாலாக நிலப்பிரச்சினை காணப்படுகின்றபோது, உங்களின் அலுவலகத்திற்கு இவற்றை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்புள்ளது. ஆனால் நீங்கள் இதுவரைக்கும் இதுவிடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்ததாக காணமுடியவில்லை. பள்ளிவாயல்களில் கடைமைபுரியும் முஅத்தின்களினதும், பேஷ்இமாம்களினதும், ஓய்வுதியத்திட்டத்திற்கு ஏதாவது தீர்வு உங்களிடம் உள்ளதா ?. அல்லது பாவப்பட்ட அவர்களுக்கு EPF, ETF போன்றவர்ரை பெற்றுக் கொடுக்கும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் உள்ளதா ?. ஏன் உங்களின் திணைக்களத்தால் இவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட நிர்ணயிக்க முடியவில்லை ? பள்ளிவாயல்கள் ஏதோ கூலித்தொழிலாளிகள் போன்று இவர்களை பணியில் அவர்த்துவதும், தூக்கி வீசுவதுமாக முஅத்தின்களையும், பேஷ்இமாம்களையும் நடாத்துகின்றார்களே..... இதற்கு உங்கள் அலுவலகத்தில் என்ன சட்டம் உள்ளது ?
இது ஒரு ஜனநாயக நாடு. தங்களுக்கு விருப்பமான வியாபாரம் செய்வதற்கும், தொழில் செய்வதற்கும் எல்லோருக்கும் இந்த நாட்டில் உரிமை உள்ளது. இதைத்தான் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது எனக் கூறுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களின் கருத்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான கருத்தாகும். முஸ்லிம்கள் வியாபாரத்திலே முன்னேறுகின்றார்கள் என்றால் அது அவர்களின் திறமையாகும். மாற்று சமூகத்தினரால் வியாபாரத்தில் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வியாபாரத்தை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் என சொல்ல முடியும். வியாபாரம் எங்களின் பாரம்பரிய தொழில் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமலா உள்ளீர்கள்.
“இலங்கையைப் பொருத்தவரை முஸ்லிம்கள் வியாபாரச் சமூகம் என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தி வருகின்றனர்” என நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்தானது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான மிகவும் பாரதூரமான கருத்தாகும். முஸ்லிம்கள் எந்த நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்தார்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாதா?
முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதன் மூலம் யாரின் சொத்தையும் கொள்ளையடிக்கவில்லையே... மற்ற சமூகத்தினரின் வியாபாரத்திற்கு தீவைத்து அல்லது வியாபாரம் செய்ய தடையாக இருந்ததாக எங்காவது சரித்திரம் உள்ளதா ? நாட்டு சட்டத்திற்கு உட்பட்டுத்தானே வியாபாரம் செய்கின்றார்கள். முஸ்லிம்களின் வியாபாரத்திற்கு அநியாயம் செய்தவர்களுக்கும், தீ வைத்தவர்களுக்கும் எதிராக உங்களின் கட்சியும், உங்களின் அரசும் நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களை வியாபாரத்தை விட்டுவிட்டு கல்வித்துறையிலே நாட்டம் காட்டுமாறு சொல்கின்றீர்கள். இதைவிட வேடிக்கை என்ன உள்ளது.
கடந்த ஆட்சியில் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு இடம்பெற்ற அநியாயங்களுக்கு நீதி பெற்றுத்தருவோம், நியாயம் பெற்றுத்தருவோம், உங்களின் வியாபாரத்திற்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத்தானே மக்களிடம் வாக்கு கேட்டீர்கள். இப்பொழுது என்ன அதை எல்லாம் மறந்து புதுக்கதை பேசுகின்றீர்கள்.
அமைச்சர் அவர்களே “இலங்கை முஸ்லிம்கள் ஒரு கல்விச் சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டால் அனேக பிரச்சினைகளுக்கு தீர்வாகி விடும் “ என நீங்கள் கூறியிருப்பது மிகவும் பிழையானதும், வேடிக்கையான கருத்துமாகும். உங்களைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் காலமெல்லாம், மாற்று சமூகத்தினர் முஸ்லிம்களை அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். கல்வியிலே முன்னேறிய சமூகங்களில் பிரச்சினை இல்லையா? ...உங்களின் இந்த கருத்தை பார்க்கும் போது எந்த அளவிரற்கு நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையை புரிந்தூள்ளீர்கள் என்பது மிகத் தெளிவாக புரிகின்றது.

continue......
இலங்கை முஸ்லிம் சமூகம் இப்படியான சங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், சமூகத் தலைவர்களினதும், உலமாக்களினதும், அரசியல்வாதிகளினதும், புத்திஜீவிகளினதும் சுயநலப்போக்கும், சமூகத்தை வைத்துக் கொண்டு தொண்டு நிறுவணங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வளங்கி, வாக்குகளை கொள்ளையடிக்கும் வியாபாரிகளுமாகும்.
இவற்றிற்கெல்லாம் மேலாக, பள்ளிவாயல்களின் நிர்வாகங்களை சீர் செய்து, நிர்வாகிகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகைமையை நிர்ணயித்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு நிர்வகிக்காலாம் என்பதை அறியாத முஸ்லிம் கலாச்சார திணைக்களமும், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவுமாகும்.
“காலத்துக்குக் காலம் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதற்கு எம்மிடையை போதியளவு புரிந்துணர்வு இல்லாமை ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது” எனக் கூறியுள்ளீர்கள்.
இஸ்லாத்தையும், புனித குர்ஆனையும், படைத்த இறைவனையும், இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாக சமூக வலைத் தளங்களிலும், பகிரங்கமாகவும் விமர்சிக்கும் அந்நிய சமூகத்தினரின் விமர்சனம் செய்வதைப் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பவர்களையும், ஒவ்வொரு இரவும் கோடிகள் தீப்பற்றி எரியும் செய்திகளை கேட்டும் கொண்டும், குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தையும், சட்டத்தையும் பார்த்துக் கொண்டும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, வாய் மூடி, கை கட்டிக் கொண்டு ஊமையாக இருக்கும் இவர்களையா புரிந்துனர்வு இல்லாதவர்கள் எனக் கூறுகின்றீர்கள் ? உண்மையைச் சொன்னால் யாருக்கு ரோஷம், சூடு, சூரனை இல்லை என்பதுதான் இப்போது புரியாமல் உள்ளது.......

Muslims thinking they r gud in business is a myth. I read a recent article in d same website, it clearly mentions only 3 blue chip companies with majority ownership of Muslims. Again our extremists would dispute whether Hemas is owned by Muslim. Sadly, majority Singhalese believe Muslims dominate business and they attack small businesses. Education without critical thinking is not worthy and community should foster and celebrate critical thinkers.

Post a Comment