Header Ads



ஞானசாரா இன்றும் நீதிமன்றுக்கு வரவில்லை..!

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினமும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்றைய -12- தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கு அமைய சட்டமா அதிபர் இன்று குற்றச்சாட்டு பத்திரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார்.

தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கோரியும், அதனை காரணங்காட்டியும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று ஞானசார தேரரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஞானசார தேரரை கைது செய்ய பிடிவிராந்து பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி இன்று விடுத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜூலை மாதம் 18, 19, 20 ஆம் திகதிகளில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


6 comments:

  1. அவ(ரி/னி)டம் தானே தேரரின் பண்பு கிடையாது. பிறகு ஏன் அவ(ரை /னை) தேரர் என்று உங்கள் செய்திகளில் பிரசுரிக்கிறீர்?????

    ReplyDelete
  2. அவன் பசுத் தோல் போர்த்திய புலி

    ReplyDelete
  3. அவன் இல்லாமல் வழக்கை விசாரித்து அவன் நிரபராதி என்று தீர்ப்பு கொடுங்கள்

    ReplyDelete
  4. சட்டம் இவரை எதுவும் செய்யாது, இவரால் தான் சட்டத்திற்கு எதுவும் செய்ய முடியும்.சட்டத்தின் ஆட்சி இவரிடம் உள்ளதோ தெரியவில்லை!

    ReplyDelete
  5. சட்டத்தை முழுங்கிய நல்லாட்சி. முஸ்லிம்களை ஏசியதற்கு அல்ல. ஹோமாகம. நீதிபதியை அச்சுறுத்தியவனை நீதியின் முன்னே நிறுத்துங்கள்.

    ReplyDelete
  6. நாடகம் சீரீயல்,தொடர்ந்து தொடரும் நாமும் சேர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருப்போம்!!! ???

    ReplyDelete

Powered by Blogger.