June 05, 2017

உயிர் பிச்சை கேட்ட இஹ்ஸான் ஜாப்ரி, நீ இன்னும் சாகவில்லையா என திருப்பிக்கேட்ட கொலையாளி மோடி..!.

குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர். 
.
இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார். 
.
அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார்.
.
தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், தன் மகளுடன் ஜாஃப்ரியின் இல்லத்தில் அடைக்கலமாகியிருந்தார். 
.
அப்போது இஸான் ஜஃப்ரி பலரிடம் தொலைபேசியில் பேசி இந்தக் கொலை தாண்டவத்தை நிறுத்த மன்றாடியதை நேரில் பார்த்தவர்.
.
“என் மகனும் மகளும் அந்த நாளில் என்னோடு இருந்தனர். அந்தக் குடியிருப்பு முழுக்க அப்போது எரிந்து கொண்டிருந்தது. 
.
நான் என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தேன். என் மகள், என் மகனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். எங்கள் சமயலறை மட்டும் எரியவில்லை; அதுவும் கூடிய விரைவில் தீப்பற்றிக் கொண்டது.
.
உயிரோடு எரிந்து சாவதைவிட, வெட்டிக் கொல்லப்படுவது மேல் என்று நினைத்து வெளியே வந்தோம். 
.
அப்போது பலர் இஸான் ஜஃப்ரியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். அவர் வீட்டின் முதல் மாடியில் இருந்தோம்.
.
அப்போது அவர் பலமுறை நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேச முயற்சித்தார். நாங்கள் மோடியிடம் பேசும்படி வலியுறுத்தினோம்.
.
இறுதியாக மோடி, இஸான் ஐயாவின் அழைப்பை எடுத்துப் பேசினார், “நீங்கள் இன்னும் இறக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று மோடி பேசினார்.
.
அந்த நேரத்தில் குடியிருப்பின் வாயிற் கதவுகளின் மேல் ஏறி குண்டர்கள், எங்களை நெருங்க ஆரம்பித்தார்கள். 
.
வேறு வழியில்லாமல் இஸான் ஜஃப்ரி எங்களைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களுடன் பேச வெளியே சென்றார்.
.
ஆனால், குண்டர்கள் அவரை இழுத்துச் சென்று அடித்து உதைத்தார்கள். அவர் மேல் பெட்ரோல் ஊற்றி அவரை உயிருடன் கொளுத்தினார்கள். 
.
எல்லா இடங்களிலும் தீ பற்றி எரிந்ததால் எங்களால் மூச்சு விடமுடியவில்லை. எனவே ஜாஃப்ரியின் வீட்டை வீட்டு வெளியேறினோம். அங்கிருந்து தப்பிக்கும்போது, கீழே சிதறிக்கிடந்த உடல்கள் தடுக்கி கீழே விழுந்தோம். அப்போதுதான் என் மகன் எங்களை விட்டுப் போனான்.
.
நான் மயங்கி விழுந்துகிடந்தேன். என் மகள் என்னை உலுக்கினாள். எழுந்தபோது என் முகத்தில் தீக் காயம் பட்டிருந்தது. ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறினோம். அப்போது ஒரு காவலரைப் பார்த்தேன். அவர் என் மீது கல்லெறிந்தார்.
.
எல்லா பக்கங்களில் இருந்தும் எங்களை நோக்கி ஆசிட் பாட்டில்கள், எரியும் டயர், நெருப்பு பந்துகள் வந்துகொண்டிருந்தன. 
.
நான் மக்கள் அலறுவதைக் கேட்டேன், கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. ஒரு சின்னப் பெண், நினைவின்றி விழுந்துகிடந்தாள். அவளுக்கு உதவ நினைத்தேன். ஆனால், என் கை, கால் எல்லாம் தீக்காயம் பட்டிருந்தது. என்னால் நகர முடியவில்லை. 
.
மாடியில் கிடந்தபோதுதான் என் மகன் என்னுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் எழுந்து கீழே போக எத்தனித்தேன், மற்றவர்கள் என்னைத் தடுத்தார்கள். கலவரக்காரர்கள் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்பதால் என்னை அவர்கள் போக விடவில்லை”.
.
இஸான் ஜஃப்ரி யார் என்றே தனக்குத் தெரியாது என புலனாய்வு குழு முன் சொன்னார் மோடி. 
.
ஆனால், மோடிக்கு ஜாஃப்ரியை நன்றாகத் தெரியும் என்கிறார் ரூபா பென். 
.
இஸான் ஜஃப்ரியின் தொலைபேசி பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர் யார் யாரையெல்லாம் தொலைபேசியில் அழைத்து பேசினார் என்கிற விவரங்கள் கிடைக்கப் பெறவேயில்லை.
.
நன்றி: கேட்ச் நியூஸ்.

1 கருத்துரைகள்:

மரணம் நிச்சயிக்கப்பட்டது கேடியின் கைகளால்தான் மரணமெனில் அதை மோடியால் கூட தடுத்து நிறுத்திவிட முடியாது யுத்தம் நம்மீது திணிக்கப்படுமாயின் அதை துணிந்து எதிர்கொள்வதுதான் ஒரே வழி.

Post a Comment