Header Ads



நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஜனாதிபதி


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (28) முற்பகல் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனைக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் தரித்திருந்து மருத்துவமனைச் செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்தஜனாதிபதி அவர்கள், விசேட டெங்கு சிகிச்சை அலகுக்குப்பொறுப்பான மருத்துவ நிபுணருடன் கலந்துரையாடினார்.

நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்தமையால்தற்போது மருத்துவமனை டெங்கு அலகில் நெருக்கடிநிலவுகிறது. அந்த அலகை விரிவுபடுத்த நடவடிக்கைஎடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்குஆலோசனை வழங்கினார்.

அத்துடன் மருத்தவமனையின் ஏனைய செயற்பாடுகள்தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி அவர்கள்அதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு சுகாதாரஅமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதுடன், சுகாதாரஅமைச்சுக்குப் புறம்பாக உள்ளூராட்சி நிறுவனங்களால்மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளைதுரிதப்படுத்துவதற்கு தனது நேரடி பங்களிப்பைவழங்குவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் டெங்கு நோயாளர் விடுதிக்குச் சென்றுசெயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் கண்காணித்ததுடன்நோயாளர்களுடனும் உரையாடினார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்கஅமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் பிரதேசமக்கள் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.



No comments

Powered by Blogger.