June 20, 2017

இந்தியா மதச் சார்பற்ற நாடா..?


பிரதமர்.......................Rss
ஜனாதிபதி....... .............Rss
மத்திய அமைச்சர்கள்.....RSS
11 மாநில முதல்வர்கள்.....RSS
16 மாநில ஆளுனர்கள்.....RSS
1000 மேற்பட்ட MLA க்கள் Rss

ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு.....
இது எப்படி இருக்கு....!!

14 கருத்துரைகள்:

are the muslims nations neutral to other religion?? worry about that first.
You don't need to worry about hindu nation.

ஆமாம்
இந்தியாவில் இனி எந்த மக்கள் பிரதினியை தெரிவுசெய்வதானலும் ஜப்னா முஸ்லீம் நிர்வாகதினரின் அனுமதி பெறவேண்டும்.

You two idiots keep your mind first India not belongs to Hindu or Tamil racists, we know about Modi and his motives, we know about Hindu dirty nations, don't come to teach about us that foolishness.

இந்த சந்திரபால் குமரன் ஆகிய இரு மோடயன்களுக்கும் தலைப்பும் விளங்குதில்ல உள்ளடக்கமும் விளங்குதில்ல. பள்ளிக்கூடம் போகாத படுவான்கரையானோ அல்லது இடைவிலகிய கரையான் சாதியோ தெரியல்ல.
அரசியல் யாப்பின் படி மதச்சார்பற்ற நாடு என்பதன் அண்மைக்கால போக்கைப்பற்றி குறிப்பிட்டால் அது தொடர்பில் கருத்துரை வழங்காது முஸ்லிம்களின் மீது கொண்ட தனிப்பட்ட குரோத்த்தை இத்தளத்தின் மூலம் வெளிக்காட்டுகின்றனர். ஜப்னா முஸ்லிம் இதனை அனுமதிப்பது தரக்குறைவான இனவாதிகளை ஊக்குவிப்பதாக அமையும்.

Mohammed lafir,
இந்தியா மாதசார்பற்ற நாடு எந்த மததிற்கும் முன்னுரீமை இல்லை.100கோடி இந்துகளின் தேசம் இந்துகள் செறிந்து வாளும் சிலதேசங்களில் ஒன்று இருந்து அது மதசார்பற்ற நாடு.இது அவர்களின் பெருந்தன்மை.
RSS உறுப்பினர்களை தெரீவுசெய்வது மக்களின் உரிமை. வாக்களித்தெ மக்கள் தெரிவு செய்தனர்.முதலில் பபாழாய் போன பழமை வாதத்தை கைவிடவேன்டும்.

உங்களையே அனுமதிக்கும்போது அவர்கள் எம்மாத்திரம்

'அரச சாசனத்தின் மூலம் மதசார்பற்ற நாடாக அன்று உருவாக்கப்பட்ட இந்தியா இன்று அவ்வாறான கொள்கையிலும் இல்லை, செயற்பாடுகளிலும் இல்லை' என்பதை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளதோடு அதற்கு காரணமான பா.ஜ.த. கட்சியையும் ஆர்.எஸ்.எஸ். மதவெறிக்கூட்டத்தையும் சாடியுள்ளார்... என்பதை, மனிதத்தையும் மனச்சாட்சியையும் தொலைத்துவிட்டு இந்த ஜப்னா முஸ்லீம் பதிவுகளில் வந்து தொல்லை கொடுக்கும் சில இனவெறியர்களான அன்டன், குமார், சந்திரபோல் போன்றோருக்கு சமர்ப்பணம்!


இந்தியா மதசார்பற்ற கோட்பாட்டால் உருவாக்கப்பட்ட நாடு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திங்கள், 30 நவம்பர் 2015 19:12 0 COMMENTS E-mailPrint

ராஜ்நாத் சிங்குக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதிலடி

திருவனந்தபுரம், நவ. 30_ இந்தியா என்ற நாடு மத சார்பின்மை என்ற கோட் பாட்டால் உருவாக்கப் பட்டதாகும் என காங்கி ரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பாஜவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச் சருமான ராஜ்நாத் சிங் இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசு கையில் மதசார்பின்மை என்ற வார்த்தை தான் நாட்டில் மிகவும் தவறாக பயன்படுத்தப்படும் ஒன் றாக உள்ளது என்று தெரி வித்தார். இதை எதிர்கட்சி கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

தற்போது இதற்கு காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத் திய அமைச்சருமான ஜெய் ராம் ரமேஷூம் பாஜவின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வளரும் சகிப்பின்மையும், மதசார் பின்மைக்கு அச்சுறுத்தலும் என்ற தலைப்பில் திருவனந் தபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், இந்தியா என் பது மதசார்பற்ற கோட் பாடால் உருவாக்கப்பட்ட ஒரு நாடாகும். இந்தியா மதசார்பற்ற கொள்கையை கைவிட்டு விட்டால், அது பாகிஸ்தானை போன்றே தோற்றமளிக்கும் ஒரு நாடாக மாறிவிடும். மத சார்பின்மை என்பது நமது அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாகும்.

நாம் மதசார்பின்மை என்ற கொள்கையை மட் டும் விட்டு விட்டால் இந் திய குடியரசின் அடிப்ப டையான அஸ்திவாரத் தையே சேதப்படுத்துவதாக ஆகிவிடும். வகுப்புவாத கொள்கைகள் வளர்ச்சி என்ற முகமூடியுடன் வந்து நாட்டின் மதசார்பின்மை கொள்கைக்கு அச்சுறுத் தலை அளித்து கொண்டி ருக்கின்றன. வளர்ச்சியின் பெயரால் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். நான் எந்த தலைவர்களையும் குறிப்பாக சுட்டி காட்ட விரும்பவில்லை. அவர்கள் யார் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே வளர்ச்சி என்ற பேச்சுக்கு அடியில் ஒளிந்திருப்பது வகுப்புவாத நடவடிக்கை தான்.

வகுப்பு வாதத்தை நான் எந்த மதத்துடனும் சேர்த்து கூற விரும்பவில்லை. அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிராக நாம் போராட வேண்டும். மதத்தை அரசி யல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சி கள் மதத்தை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்து கின்றன. வகுப்புவாதம் எப் போதும் நாட்டிற்கு அச்சு றுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுதான். நாம் அனைவரும் வேற்றுமை யில் ஒற்றுமை என்பதில் உறுதியாக இருக்க வேண் டும் என்று தெரிவித்தார்.

(link...
http://viduthalai.in/previousyear/sunday-paper/112955-2015-11-30-13-47-32.html)

மேலும் சில பதிவுகள்.... அன்டன், குமார், சந்திரபோல் போன்றோருக்கு சமர்ப்பணம்!

02.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள், செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.

கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை, பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை, அங்கிருக்கும், கிறித்துவ, இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள், இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ, கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ, இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார், இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ, கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை. இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள், விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில்.

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை, என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார், அது அவருடைய சொந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை, வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம். ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு, பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும், இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற, மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை, இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும், மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள், பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள், சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும், குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும், புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள்

தொடர்ச்சி...

அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், அரசு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது, தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய, இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது, ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை. லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில், "அன்றைய தினம் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை, உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள்" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள், இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி, கலவரங்களால் இறந்து போன மனிதர்கள், கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள், இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது, இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள்.

அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள், வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என்று விரட்டி அடித்தார்கள். அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும், அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது.

பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும், இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும், அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள், காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி, பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை, அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம், நீதியோடும், நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை, நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை, கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ச்சி...


பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால், இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும், பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும், சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும், இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும்.
இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும்,வழிபாட்டு முறைகளோடும் அன்போடும், அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல்.
நன்றி: கை. அறிவழகன்

link :
(http://www.sinthikkavum.net/2010/09/blog-post_4235.html)


இங்கு ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்...

இனவெறியும், மதவெறியும், பொறாமையும், காழ்ப்புணர்வும், நன்றிகெட்ட தனமும், நயவஞ்சகத்தனமும் மிகைத்துக்காணப்படுகின்ற மிக,மிக, அநேகமான இலங்கைத்தமிழர்களை விட.. மனச்சாட்சியை முன்னிலைப்படுத்தி உண்மைகளை உரக்கச்சொல்லும் இந்திய தமிழர்கள் எவ்வளவோ மேல்...! அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இன்னும் வேணுமா?......

"மோடி அரசு இஞ்சி தின்ற குரங்கு மாதிரி முழிக்கிறது!"

link ( http://www.sinthikkavum.net/search/label/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE)

ஜய் ராம் காங்கிரஸ்காரர்.பாஜாக வுக்கு எதிராக ஆயிரம் சொல்லுவார்.இதையெல்லாம் தூக்கி பிடிக்கிறிறே.சின்னபுள்ளதனமாக இருக்கு.
ஆளுபவரின் கொள்கைகள் நாட்டின் தன்மையை தீர்மாணிக்காது.

Copy பண்ணி கொமண்ட்ஸ் போடும் அன்பரே!
உமது பதிவை வாசிக்க சிரிப்பு வருது.
இப்பபோது இலங்கையீல் எல்லா அரச நிறுவனங்களிலும் இப்தார் அரசால் கோண்டாட படுகிறது.உமது வாதப்படி பார்த்தால் இலங்கை இஸ்லாமிய குடீயரசா??
வடக்கில் முக்கிய நிகள்வுகளின் போது இத்து பூசைகள் செய்யப்படுகிறது.அப்ப இலங்கை இந்து குடியரசா.
RSS பா.உ களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பதால் இந்தியா மதசார்பை மீறீவீட்டதாக கூறுகிறிர்கள் உங்கள் கருத்துபடி பார்த்தால் இந்தியாவில் மூஸ்லீம் ஒருவர் ஜானாதிபதி ஆக இருந்தார் அப்படி என்றால் இந்தியா மாதசார்பை மிறி இஸ்லாமிய மதத்தை சார்ந்ததாக அர்த்தமா??
மக்கள் பிரதிநிதிகளால் அவர்களின் செயற்பாட்டால் அரசமைப்பை நிர்ணயிப்பதென்றால் பல நாடுகளின் அரசமைப்பு கேள்விக்குறியே.இதனை விளங்கும் அளவீற்க்கு சிந்தனை ஆற்றல் உம்மிடம் இல்லை.கஷ்மீர் இந்து மன்னர் ஹரீசீங்கால் இந்தியாவிடம் கொடுக்கபட்டது.அங்குள்ள ஆதிபண்டிட் இம் பாதுகாக்க படும் என்ற உறூதி மோழீ மன்னருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவிற்கு வாக்காளத்து வாங்குவது எம் நோக்கமில்லை.மாறாக முஸ்லீம் நாடுகளில் ஏனையமதத்தவரிற்கு வழங்கபடுவதை விட அதிக உரிமையும் பாதுகாப்பும் உள்ளது.2020ல் இந்தியாவே முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கும்.

இஸ்லாமிய நாடுகள் எல்லாம் தங்கள் இஸ்லாமிய கொள்கைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் ஆனால் இஸ்லாம் அல்லாத நாடுகள் சமய சார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்க வேண்டுமென்ற பச்சோந்திகள் எதிர்பார்ப்பு.!

Post a Comment