Header Ads



கத்தாரை தனிமைப்படுத்துவது, இஸ்லாத்திற்கு எதிரானது, மரண தண்டனைக்கு ஒப்பானது - எர்துகான்


பல அரபு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிரானது, மனிதாபிமானமற்றது என்று துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், கத்தார் மீது அமல்படுத்தியுள்ள தடை, மரண தண்டனைக்கு ஒப்பானது என்று எர்துவான் கூறினார்.

கத்தாருக்கு உறுதியான ஆதரவளிக்கும் துருக்கி, பிற நாடுகள் விதித்திருக்கும் தடையின் விளைவுகளை சமாளிப்பதற்காக , விமானம் மூலம் உதவிப்பொருட்களை அனுப்பிவருகிறது.

துருக்கியின் உதவி நடவடிக்கைகளில் இணைந்துள்ள மொராக்கோ அரசும் கத்தாருக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை அனுப்புகிறது.

கத்தாருக்கு அனுப்பப்படும் இந்த உதவி மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், தீவிரவாதம் தொடர்பாக தோஹா அண்மையில் சந்தித்துவரும் அரசியல் விவகாரத்துடன் தொடர்பில்லாதது என்றும் மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

9 comments:

  1. துருக்கி தேவையில்லாமல் கட்டார் விடயத்தில் தலையிடுகிறது.

    சதாம், கடாபி போன்றவர்களுக்கு நடந்த கதைகளை மறந்திட்டார் போல.

    ReplyDelete
  2. எல்லா விடயங்களையும் இஸ்லாத்தடன் முடிச்சு போட்டு அரசியல் வளர்க்காதீர்கள்

    ReplyDelete
  3. Ajan Antonyraj நீர் கட்டாருக்கு ஆதரவா? அல்லது சஊதிக்கு ஆதரவா?

    ReplyDelete
    Replies
    1. ஆதரவா?. இரண்டும் ஜனநாயகம் இல்லாத மன்னராட்சி நாடுகள்.

      ஆனால், ISIS போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக சொல்லப்படுவதால் தண்டனை வேண்டாமா?

      Delete
    2. Ithu enna iraq entry ninaichitaiyo???? Turkey

      Delete
  4. அரபு நாட்டு மன்னர்களிடையை அரபு வசந்தம் என்ற எழுச்சியின் பின்னர் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது. இதனால் தங்களது இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு பலவழிகளில் முயற்சி செய்கின்றனர். இதில் சில நாடுகள் மேற்குலக தந்திரோபாயங்களின் பின்னால் அள்ளுண்டு செல்கின்றனர்.
    இச்சந்தர்ப்பத்தில் நபியவர்களின் வழிகாட்டலை கருத்திற் கொள்வது அவசியமாகும். உங்களது பொறுப்பாளராகவும் ஆலோசகர்களாகவும் யூத, கிறிஸ்தவர்களை நியமிக்கவேண்டாம் என்பது அவர்களது கட்டளையாகும். அவர்கள் எப்போதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவே செயற்படுவர் என்பதாலாகும்.
    எனவே அரபு இஸ்லாமிய நாடுகள் தம்மிடையே பேச்சுவார்த்தைகள் நடாத்தி தீர்வுகளைக் கண்டுகொள்ள வேண்டும். குறிப்பாக 1928 களுக்கு முன்னர் உஸ்மானிய பேரரசிற்கு தலைமைவகித்த துருக்கியின் தலைமையில் குவைத் டூனீசியா மற்றும் முஸ்லிம் நாடுகள் இணைந்து தீர்வுகளைத் தேடுவதே சாலப் பொருத்தமானது எனலாம்.

    ReplyDelete
  5. Ajan ,

    Thalaivarai vittuvitteer ! Paavamthaaney ?
    Aenayya umakku intha vendatha vela ?
    Anbukku ilakkanamaga Thaj Mahal poanru
    innumonru ulagil verengu irukkirathu ?

    ReplyDelete
  6. அந்தோனி போன்ற கழிசடைகளுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இருக்குமென்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. பாசிச புலிப்பயங்கரவாதிகளால் மனித இரத்தம் ஊட்டியும் சியோனிச சாக்கடை பணத்திற்காக பேராசை ஊட்டியும் வளர்த்தெடுத்த கயவர் கூட்டத்தைச்சேர்ந்தவனாயிட்டே. அரேபிய
    ஜனநாயகம் பற்றி நக்கல் செய்யும் இவனுக்கு ஜனநாயக இந்திய காவிகளின் கொலைக்களம் பற்றியும் அழிஞ்சிப்பொத்தானையில் நித்திரையிலிருந்த பச்சிளம் பாலகர்களையும் கர்ப்பிணித்தாய்மார்களையும் வெட்டியும் கிழித்தும் கொலைவெறியாட்டம் நடத்தியது பற்றியும் நிராயுதபாணிகளாக பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்களை சுட்டுத்தள்ளியதையும் சிந்திக்கும் அளவிற்கு மதியிழந்து comments எழுதுகிறான்.
    இக்கொலைகளால் உயிரிழந்த அத்தனை ஆத்மாக்களினதும் சாபமும் உமக்கு சமர்ப்பணம்.

    ReplyDelete

Powered by Blogger.