Header Ads



பள்ளிவாசல் தாக்குதலில் கைதான, பொதுபல சேனா உறுப்பினரின் கடையிலிருந்து முக்கிய பொருட்கள் மீட்பு

குருநாகலை - மல்லவபிடிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் கடை அறையொன்றில் இருந்து 486 வகை பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது , பத்திரிக்கைகள் , சுவரொட்டிகள் , ஆவணங்கள் , இருவெட்டுக்கள் உள்ளிட்ட 486 வகை பொருட்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அவற்றில் வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பள்ளிவாசல்களில் தீவிரவாதம் தூண்டப்படுகிறது என்றும் மத்ரசாக்களில் ஆயுதப்பயிற்ச்சி வழங்கப்படுகிறது என்றும் போலிப்பிரச்சாரங்களை செய்துகொண்டு பளுசேனாக்கள் தமது அங்கத்தவர்களை பிழையாக வழிநடாத்தி வருவதற்கான ஓர் சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது.
    இதுவரையில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் நாட்டைப் பிரித்துக்கேட்காமலும் சேர்ந்து வாழ்வோம் என்று பிரகடனம் செய்யும் இலங்கை முஸ்லிம்களை சீண்டிப்பார்க்கிறது இந்த பளுசேனா கூட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.