Header Ads



கல்விக் கூடங்களில் முகத் திரைக்கு தடை - நார்வே


கல்விக்கூடங்களில், இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதைத் தடை செய்யும் மசோதாவை நார்வே கொண்டு வந்திருக்கிறது.

ஸ்காண்டிநேவியா நாடுகளில் முதல் ஒரு நாட்டில் கொண்டுவரப்படவுள்ள இத்தடை, மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மட்ட கல்விக்கூடங்களுக்கும் பொருந்தும். முழு முகத்திரையான நிகாப் மட்டுமல்லாமல், புர்கா மற்றும் பலக்லாவா போன்ற பிற வகை முகத் திரைகளையும் இது தடை செய்கிறது.

ஆனால் முக்காடு, தொப்பிகள் ஆகியவற்றை அணியலாம்.

இந்த மசோதாவுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தந்துள்ள நிலையில், இது அடுத்த ஆண்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

''இந்த முகத்திரை துணி, மாணாக்கர்கள் நல்ல கல்வியை பெறுவதற்கு முக்கியமான நல்ல தொடர்பாடலை தடுக்கிறது ,'' என்று கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் டர்பிஜோன் ரோ இஸ்சேஸன் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு இடைக்கால அமைச்சர் சாண்ட்பெர்க் ஒருவர் மற்றொருவருடன் உரையாடுவது ``அடிப்படையான ஒரு விழுமியம்`` என கூறினார்.

ஏற்கனவே பள்ளிகளில் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை நார்வே உள்ள உள்ளூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர் ஆனால் இதுவரை தேசிய அளவில் ஒரு கொள்கை கிடையாது.

நார்வேயில் முகத்தை முழுமையாக மறைக்கும் துணி பரவலாக அணியப்படுவதில்லை என்ற பட்சத்தில் இந்த திட்டத்திற்கான தேவை பற்றி விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

'' மிக சிலரே நிகாப் துணியை அணிகிறார்கள் . சமூகங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற விஷயத்தில் , இது ஒரு சிறிய பிரச்சனை. அதனால் இந்த திட்டம் தேவையில்லை என்று நான் எண்ணுகிறேன்,'' என்று மைனோட்டென்க் என்ற ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த லிண்டா நூர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆண்டு, நார்வேயின் இஸ்லாமியக் கவுன்சில் என்ற ஒரு இஸ்லாமியக் குழு, தனது அமைப்பில், நிகாப் அணிந்த ஒரு மக்கள் தொடர்பு அதிகாரியை வேலைக்கு அமர்த்திய நடவடிக்கை ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்வமத நம்பிக்கை தொடர்பான கலந்துரையாடல்களை மேம்படுத்த அரசின் நிதி அளிக்கப்பட்ட இஸ்லாமிக் கவுன்சிலை கலாச்சார அமைச்சர், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற இஸ்லாமிய நிறுவனங்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த நகர்வை ஆதரித்து அந்த வேலைக்கு சிறந்த நபர் லெய்லா ஹேசிக்தான் என்று அந்த கவுன்சில் தெரிவித்தது.

3 comments:

  1. Nikab is only an additional option, is not part of basic islamic female dress code. So no harm.

    ReplyDelete
  2. இஸ்லாமிய பெண்கள் வெளியே தங்களது முகங்களை மறைப்பது கடமை என நம்புவோர் அதற்கான தமது தரப்பு நியாயங்களையோ மார்க்க ஆதாரங்களையோ இங்கு முன்வைத்தால் நல்லதல்லவா?

    ReplyDelete
  3. நபியின் மனைவிமார்களைப் போல் வாழ விரும்பும் பத்தினிப் பெண்களும் இருக்கிறார்கள். கல்வியை விட ஒழுக்கத்தை மேலாக கருதுபவர்கள் இத்தகைய இடங்களை விட்டு ஒதுங்கி நடப்பது தான் இறையச்சத்துக்கு மிகவும் சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.