Header Ads



தேவாலயம் வாங்க, பிரிட்டன் மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்

பிரிட்டனின் கோன்வாலிலுள்ள சிறிதொரு கிராமம், மேத்தோடிஸ்ட் சிற்றாலயத்தை வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் உதவி செய்துள்ளார்.

இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக நிதி திரட்டும் கடைசி முயற்சியாக ஹெல்ஸ்டனுக்கு அருகிலுள்ள கோடால்பின்வாசிகள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற கோடால்பின் ஸ்டேபிள்ஸூடன் ஷேக்கின் நிதி ஆதரவு என்ற பெயரையும் இந்த கிராமம் பகிர்ந்துள்ளது.

"இந்த செயலை மிகவும் பாராட்டுகின்றோம்" என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மைக்கி தெரிவித்திருக்கிறார்.

சமூக மையமாக மாற்ற எண்ணிய இந்த கூட்டமைப்பினருக்கு இந்த சிற்றாலயத்தை வாங்குவதற்கு 90 ஆயிரம் பவுண்ட் தேவைப்பட்டது. 25 ஆயிரம் பவுண்ட் ஏற்கெனவே திரட்டியிருந்தனர்.

ஷேக் எவ்வளவு தொகை அளித்தார் என்று கூறப்படவில்லை. ஆனால், தேவைப்படுகின்ற நிதிக்கு அவர்களை மிகவும் நெருங்கி வர செய்ததாக மைக்கி தெரிவித்திருக்கிறார்,

போதுமான நிதியை பிற இடங்களில் இருந்து திரட்டுவதில் தோல்வி அடைந்த பின்னர், இந்த கிராமத்திலுள்ள ஒருவரான வலேரியே வாலேஸ் என்பரின் கடைசி முயற்சியாக இந்த சிந்தனை உதித்துள்ளது.

"நாங்கள் இதுபற்றி எதுவும் எண்ணவில்லை. ஆனால், பிறகு துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புக்களை பெறத் தொடங்கினோம் என்று மைக்கி தெரிவித்திருக்கிறார்.

"நாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று எண்ணினோம். ஆனால், இதில் மோசடி இருக்கவில்லை"

இந்த கிராமத்தை பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த ஷேக் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த தேவாலயத்தை அரங்காக பலவித வசதிகளோடு மீட்டெடுக்க இந்த குழுவிற்கு இன்னும் 3 லட்சத்து 50 ஆயிரம் பவுண்ட திரட்ட வேண்டியுள்ளது,

No comments

Powered by Blogger.