Header Ads



கத்தார் மீதான, சில விமர்சனங்கள்..!

-Fahad Ahmed-

கத்தார் மீது திடீர் பாசம் பொழிகிறவர்கள் அமெரிக்கா தலையிட்டால் சவுதியும் இன்ன பிற வளைகுடா நாடுகளும் பொருளாதார தடை சுமத்தியதாக கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் மிக பெரிய ராணுவ தளம் கத்தாரில் தான் உள்ளது. சவுதியை விட அமெரிக்காவிற்கு நெருக்கமான உறவு கொண்டது கத்தார்.

பாலஸ்தீன போராளிகளை ஆதரித்ததால், கத்தார் மீது தீவிரவாத பட்டம் சுமத்துவதாக கூறுகிறார்கள்.

ஆனால் உண்மை அவ்வாறு அல்ல, ஈரான் ஷியா கும்பலை ஆதரித்து கத்தார் தன் நாட்டு ஊடக பலத்தை வைத்து உலக நாடுகளில் தவறான பிரச்சாரம் மேற்கொண்டது, சவுதியையும் பஹ்ரைனையும் குற்றம் சாட்டி உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை விளைவித்தது, எந்த நாடு தன் நாட்டை விமர்சிப்பதை ஏற்க்கும்?

ஃபிபா என்கிற ஆடம்பர சூதாட்ட கால்பந்தாட்டத்திற்கு பதினெட்டு லட்சம் தொழிலாளர்களை ரத்தமும் சதையுமாய் கசக்கி பிழிவதை கண்டுக்கொள்ளாதவர்கள் சாப்பாட்டிற்கு மால்களுக்கு ஓடுவதை பரிதாபமாக கூறி அனுதாபத்தை விதைக்கிறார்கள்.

ஃபிஃபா கால்பந்தாட்ட கிரவுண்ட் கட்டுமானத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய தொழிலாளிகள் உயிரிழிந்ததை என்றாவது சிந்தித்தார்களா?

உலக நாட்டு கால்பந்து வீரர்களுக்கு விபச்சார சந்தையை கட்டி கொடுப்பதையும், மதுபான பார்களை அமைத்து கொடுப்பதை எல்லாம் பெருமை பொங்க பேசுகிறவர்கள் அதன் பின்னால் உள்ள உழைக்கும் வர்கத்தின் ரத்த இழப்பை பற்றி அக்கரைக்கொள்வதில்லை.

சுமார் மூன்று லட்சம் கோடியை ஆடம்பரத்திற்கு அள்ளி தெளிக்க தயார இருக்கிறது கத்தார் அரசு.

அந்த நாட்டின் பட்ஜெட்டை பத்து முறை போடும் அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட் அது.

பொருளாதார தடை எல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல, அதை எப்படியும் எதிர்க்கொள்வார்கள்,

சவுதி சந்திக்காத பொருளாதர தடையா? 

இந்தியா சந்திக்காத பொருளாதர தடையா? 

நேபாள் சந்திக்காத பொருளாதார தடையா? 

பாகிஸ்தான் சந்திக்காத பொருளாதார தடையா?

உலகில் பல நாடுகள் அதை சந்தித்தே உள்ளது. என்னவோ சவுதி மட்டும் தான் முதல் முறையாக பொருளாதார தடை விதித்தது போல கதறுகிறார்கள்.

அதே போல் இது நீடிக்க போவதும் இல்லை, அண்ணன் தம்பி சண்டை மாதிரி எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துக்கொள்வார்கள்.

இதில் சம்பந்தம் இல்லாமல் நடுவில் தலையை கொடுக்கிறவர்கள் தலையை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

6 comments:

  1. எது எப்படியோ பலஸ்தீன காஸா மக்களுக்கு திறந்த மனசோடு இருகரங்களும் நீட்டிய நாடு கத்தார் அதை யாரும் மறக்க மறுக்க முடியாது.பிரச்சினை இருந்தால் பேசி இஸ்லாமிய முறையில் அழகாக திருத்துக்கொள்ளலாம் சும்மா ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளாமல்.

    ReplyDelete
  2. Very biased article and writer shows very little understanding in current situation.

    ReplyDelete
  3. Jaffna Muslim should screen these types of biased articles.comparing to Saudi, Qatar is far better whether it is human rights issues or expatriates welfare. 5he writer may not have sufficient knowledge regarding the recent hacking of Qatar news agency by which the hackers published the news against some other countries. Qatar is a country fighting along with Saudi against Shi'a in Yemen.

    ReplyDelete
  4. தெளிவான முனாபிக் தனமான கட்டுரை.

    ReplyDelete
  5. Madamayin uchcham indha katturai.

    ReplyDelete

Powered by Blogger.