Header Ads



வடக்கின் முதலமைச்சராக சிவஞானம்..? விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக லங்காசிறியின் ஊடக சேவைக்கு அறியக்கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சீ.வி.கே.சிவஞானம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. இரண்டாவது தமுள் டேசிய தலைவர் விக்கி மாமாவிற்கும் ஆப்பா??

    ReplyDelete
  2. எனக்கு தெரிந்த வரை CV ஒரு நல்ல மனிதர்.
    முதலில் அவர் ஒரு நீதிபதி.
    பின்பு தான் அவர் ஒர் அரசியல்வாதி.
    ஊழல் அவரது நீதிப் பார்வையில் குற்றம்.
    அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அது ஒரு நற்செயல்.
    தமிழ் அரசியல்வாதிகளைக் கண்டு வியந்த்திருக்கிறேன்.
    இப்போதோ......
    தவறை சரியென வாதாடும் ஒரு கூட்டத்தையும், அதற்கு வக்காலத்து வாங்குவோரையும் பார்க்கும்போது ஆச்சரிமாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.