June 05, 2017

முனாபிக்குகளின் கூட்டணி, கட்டார்தான் அடுத்த இலக்கு

அரபு முஸ்லீம் உலகம் இன்னொரு இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளது . காபிர்களை விட முனாஃபிக்குகள் மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம் .

ஒரிரு தினங்களுக்கு முன்னர் கசிந்த இரகசிய  ஈ மெயில் தொடர்பு அந்த  பிரிவின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை இறுக்க அடித்துவிட்டது .

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான அமெரிக்க தூதுவர் யூசூப் அல் உதைபா இஸரேலிய சார்பான ஜனநாயக பாதுகாப்பு அமையம் foundation of defense of Democracies
(FDD) என்கிற கொள்கை வகுப்பு அமைப்போடு (Thinktank) இரகசியமாய் தொடர்பு வைத்திருந்த விடயம் குளோபல் லீக்ஸ் என்கிற கணனி தகவல் தகப்பாளர்களால் (Heckers) வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இஸ்ரேலுடன் அரபு உலகத்துக்கு உள்ள இரகசிய தொடர்பை இந்த விடயம் பறைசாற்றுகிறது

2014 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய கோடீஸ்வரர் ஷெல்டன் அடிசண் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றால் இணைந்து நிதி இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  FDD என்ற இந்த think tank அமைப்பு இஸ்ரேலிய சார்பான இந்த அமைப்பு ஆகும் . இந்த அமைப்பை தமது சுயநல இலாபங்களுக்கும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுவதற்கும் ஜக்கிய இராச்சியம் பயன்படுத்திக்கொண்டுள்ளமை  முஸ்லீம் உம்மாவை கூறு போட்டு விற்றுள்ளமையை சுட்டுக்காட்டுவதுடன் , பிராந்தியத்தில் எரிகின்ற நெருப்புக்கும் ஆட்சியை அல்லது மன்னர் ஆசனங்களை
பாதுகாப்பதற்காக உம்மைவை பிரித்து வைத்துக்கொண்டுள்ளமையையயும் நிரூபணம் ஆகிறது .

அந்த ஈ மெயில் தொடர்புகளில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கங்களை எப்படி முடக்குவது என்பது குறித்து திட்டம் தீட்டப்பட்டுள்ளமை மற்றும் துருக்கியில் இடம்பெற்ற இராணுவ புரட்சியின் பின்னணியில் இருந்து செயற்பட்டமை ,மற்றும்  ஈரானுக்கு எதிராக அதன் செல்வாக்கு பிராந்தியத்தில் பரவுவதை  தடுப்பது போன்ற விடயங்கள் அடங்கி உள்ளன .அது மாத்திரமன்றி கட்டாரை எப்படி தனிமைப்படுத்துவது அதன் பிராந்திய செல்வாக்கை எப்படி மட்டுப்படுத்துவது போன்ற விடயங்களும் திட்டம் தீட்டப்பட்டுள்ளன .

முனாபிக்குகளுடன் கை கோர்ப்பதை விட ஈரானுடன் தொடர்பை பேணுவது மேல் என்று கட்டார் எண்ணி இருக்க வேண்டும் . கட்டார் ஈரானுடன் இராஜ தந்திர தொடர்பை ஏற்படுத்தியுள்ளமை சவூதி அரேபியா ,ஐக்கிய அரபு இராச்சியம் குவைத் பஹ்ரைன் எகிப்து போன்ற மன்னர் ஆட்சியை பாதுகாக்க மாடாய் உழைக்கிற அரபு  நாடுகளை முகம் சுழிக்க வைத்துள்ளன .

இதை அடுத்து யேமனுக்கு எதிரான இராணுவ கூட்டணியில் இருந்து கட்டாரை  சவூதி அரேபியா நீக்கியுள்ளது .தரை விமான எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது. அத்தோடு தமது நாடுகளில் உள்ள கட்டார் பிரஜைகளை மூன்று நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு சவூதி அரேபியா கேட்டுள்ளது . அரபு நாடுகளை ஒற்றுமையாக இருக்குமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டிலர்சன் கேட்கின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது .

முற்போக்கு வாதத்தின் பின்னணியிலும் ,முஸ்லீம் உம்மாவை ஒன்று சேர்ப்பதிலும் ,கல்வி மற்றும் முஸ்லீம் ஊடக புரட்சியில்  முன்னணி வகித்த கட்டார் மீது சவூதி தலைமயிலான கூட்டணியின் அடுத்த துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது .மன்னர் ஆசனங்களை பாதுகாக்க சகோதரத்துவ நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாய் வேட்டையாடிய முனாபிக் கூட்டணி இன்னொரு வேட்டைக்கு தயாராகி உள்ளது .

முஸ்லிம் உலகம் கண்ணீர் வடிப்பதில் பின்னனியில் இருப்பதும் இந்த முனாபிக் கூட்டணிதானா ?

முனாஃபிக்குகளை பாதுகாலர்களாக எடுத்துக்கொள்வதில் இருந்தும் அவர்களின் கூட்டு சதிகளில்  இருந்தும் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹு த ஆலா உம்மாவை பாதுகாப்பானாக ..

-முஹம்மது ராஜி

4 கருத்துரைகள்:

இந்தக் கட்டுரையோடு நானும் முழுமையாக உடன்படுகிறேன்.. ஏனெனில் அண்மைக்காலமாக கட்டார் துருக்கியோடு சேர்ந்து இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவதிலும் ஹமாஸுக்கு உதவுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

Qatar is slightly influenced by IRAN and it's SHIA thought, blindly supporting Brotherhood (IKHWAN) breaking all security deals, it could be the real reason Brother

Rather than partnering with Iran, Qatar should sit with the brotherly countries and resolve the issues. Qatar no longer can survive with isolation from the Gcc. Iran is penetrating else where. Qatar is going to suffer in all direction.

This comment has been removed by the author.

Post a Comment