Header Ads



முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்தது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

-DC-

முஸ்லிம் கடையொன்றுக்கு தீ வைத்தது அல்லது பிக்குவொன்றை தாக்கிய செய்திகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இன்று -13- பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கட்டுப்படுத்த முப்படையினரை ஈடுபடுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத்தினரை ஈடுபடுத்தக்கூடிய அளவு நாட்டில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தேவையான ஆதரவை வழங்கி நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினர் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. நுணுக்கமான முறையில் தங்களது நோக்கங்களை நிறைவுசெய்வதற்கு சிலர் அனுசரணையாளராக இருப்பதுண்டு. இன்னும் சிலர் மறைகரமாக இருந்து செயற்படுவதுமுண்டு. இதனை புலனாய்வாளர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது போகலாம். ஆனாலும் சிலபோது தவளையும் தன்வாயால் கெடுவதுமுண்டு.

    ReplyDelete
  2. ஆட்டுவிப்பார் யாரொருவர் ஆடாதானே கண்ணா
    ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதானே கண்ணா

    ReplyDelete
  3. அப்போ - ஜானத்துர கூட்டுல மச்சானும் மிக முக்கியமான பங்காழிபோல................ அதுதான் ஜானம் இந்த ஆட்டம் ஆடுது. ஆக் மெதல்ல இந்த மாப்பிழைய மாமியார் வீட்டுக்கு அனுப்பணும்...........

    ReplyDelete
  4. Seems all.these laughing stocks involving in the cases

    ReplyDelete

Powered by Blogger.