Header Ads



முஸ்லிம்களுக்கான தலைமைத்துவம் ஒன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாக வேண்டும்

(மபாஸ் சனூன்)

இலங்கை முஸ்லிம் சமுகத்துக்கு சிறந்த தலமைத்துவம் ஒன்று வழங்குகின்ற தலமை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாக வேண்டும் என்று கனவு காணுகின்றேன். இன்றைய முஸ்லிம் தலமைகள் முஸ்லிம் சமுகத்தை நாட்டாற்றில் கைவிட்டுள்ளன. அவர்களுக்கு முக்கியம் பதவிகளும் சலுகைகலும் மட்டுமே என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் ஏ. ஆர். எம். ஏ காதர் குறிப்பிட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துக்கான காரணம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற கலை, கலாசார, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு திர்வு காணும் நோக்கிலேயே இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதில் மூன்று பீடங்களே காணப்பட்டன. தற்போது இப்பல்கலைக் கழகத்தில் ஐந்து பீடங்கள் இருப்பது இதன் வளர்ச்சியைக் காட்டுகிறது. அது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்று இதில் இளம் விரிவுரையாளர்களாக இருந்தவர்கள் இன்று முக்கியமான வளவாளர்களாக மாறியுள்ளனர்.

முஸ்லிம் சமுகத்துக்கு சிறந்த தலமைத்துவம் வழங்கிய ஒரு சிரேஷ்ட தலைவர் மர்ஹூம் ஏ. எச். எம். அஷ்ரப் என்றும் அவர் குறிப்பிட்டார்.    

10 comments:

  1. Replies
    1. யாரைச் சொல்கின்றீர்கள்?

      Delete
  2. முஸ்லிம்களுக்கான தலைமைத்துவம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாக வேண்டும் என்பதே அதன் ஸ்தாபகரான தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

    இலங்கை முஸ்லிம் சமுகத்தை வழிநடாத்தக்கூடிய சிறந்த தலமைகளை உருவாக்கக்கூடிய ஒரு பாசறையாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் திகழ வேண்டும் என்பதும் தலைவர் அஷ்ரபின் எதிர்பார்ப்பாக இருந்தது.இது போன்ற இன்னும் பல விடயங்கள் அதாவது தென்கிழக்கு பல்கலைக்கழகம் அது சார்ந்திருக்கும் பிராந்திய சமூகத்தின் பால் கொண்டிருக்கும் தார்மீக கடமைகள் பற்றி அப்பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்காக பல்வேறு தியாகங்களையும் செய்துகொண்டு தலைவர் அஷ்ரபுடன் விசுவாசத்துடன் துணை புரிந்த அப்பல்கலைக்கழக ஸ்தாபக மாணவர் தலைவர்கள் ஒரு சிலருடன் கலந்துரையாடியபோது தெரிவித்திருந்தார்.

    ReplyDelete
  3. Inefficient university can not produce a good leader

    ReplyDelete
  4. நேரடியாகவே சொன்னால் என்ன? முன்னால் வேந்தருக்கு வாக்களியுங்கள்.

    ReplyDelete
  5. I like this (Piradesavada leadership) idea brilliant. We need more brilliant ideas from these intellectuals.
    Please say we need good leaderships from Muslim Ummah. East or west, north or south no matter who he is? Need a good leader.

    ReplyDelete
    Replies
    1. Will take some time.
      May be 30 40 years

      Delete
  6. எந்த கல்வி நிறுவனம் தனிநபர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக தொழிற்படுகின்றதோ அங்கு உரிய கற்றல் பேறுகளை அடைவது கடினமாகும். அந்த வகையில் ஊர் வாதம் , பிரதேச வாதம் களையப்பட்டு திறமைக்கு முக்கியத்துவம் வழங்கும் நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்றிலிருந்து தலைவர்களையும் பெரியாரகளையும் இப்பல்கலைக்கழகம் ஈன்றெடுக்கும் எனலாம்.

    ReplyDelete
  7. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்தான் மாகாணபை உருப்பினர் தவம் அகரைப்பற்று மருதனை இரடையும்சேர்தவர் தலைவராக்க்ககோசிக்கமே எதிர்ப்புதான் அதிகம் வரும் அப்ப எப்புடி பலைக்கழகம் தலைமத்துவம் உருப்படியா எழுதுங்க பாஸ்

    ReplyDelete
  8. @ Junaid well said. அவர்களின் பிரதேசவாத குணம் மாறாது!

    ReplyDelete

Powered by Blogger.