June 15, 2017

இயக்க வாதங்களே, எமது சமூகத்துக்கு அச்சுறுத்தல்...

 -Kaleelur Rahuman-

தமிழர் தரப்பு தேசியவாதத்தை விடவும், சிங்கள தரப்பு பேரினவாதத்தை விடவும் எம்மத்தியில் அண்மைக்காலத்தில் வேரூன்றி வருகின்ற மார்க்கம் சார்ந்த இயக்க வாதங்களே எமது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

எமது மார்க்கம் சார்ந்த இயக்கங்களுக்கு எந்த வரையறையும் இல்லை. மிம்பரில் நின்றுகொண்டு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். மூன்று மாதம் மதரசா சென்றால் பத்வா கொடுக்கலாம். தேவையெனில் மற்ற மதத்தை நிந்திக்கலாம். சகோதர ஜமாஅத் காரர்களை காபிர்கள் எனலாம். அவர்களை கொல்ல வேண்டும் என்று தனது இயக்க ஆள்களுக்கு வெறியூட்டலாம். இதுதான் எமது மௌலவிமார்கள் இன்று இஸ்லாம் வளர்கின்ற அழகு.

இதனை தவிர்த்து, நாம் ஒவ்வொரு வருடமும் எதனை பேச வேண்டும்? எங்கே எப்போது எப்படி பேச வேண்டும்? எந்த வரையறைக்குள் பேச வேண்டும்? என்ற வரையறைகள் வரைவிலக்கணப்படுத்தப்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜம்மியத்துல் உலமா போன்ற ஒரு அமைப்பினால் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இரகசிய கிலாபத் என்று உலகை சீரழித்துக் கொண்டிருக்கின்ற சில மன்னராட்சி நாடுகளின் மன்னர் மந்தைகளின் காசோலைகளுக்காக வெறும் இயக்கவாதங்களை இங்கு வளர்ப்பதை விட்டுவிடவேண்டும்.

தீர்வாக ..

எமது மார்க்க சமூக அரசியல் தலைமைகள் இன்னும் பக்குவப்பட வேண்டும். எமது சகவாழ்வு நிகழ்ச்சி நிரல் ஒன்றை தயாரித்து அதன்படி எமது சமூகத்தை வழி நடாத்த வேண்டும்.

குறிப்பாக முதற்கட்டமாக எந்த ஜமாத்துகளும் ஆளை ஆள் சாடாமல் முஸ்லிம்களின் நாளாந்த கல்வி, கலாச்சார, ஒழுக்க மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்காக எந்த வகையிலாவது எதையாவது எமது கண்மணி முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வாழ்வோடு வரலாற்றோடு இணைத்து மக்களுக்குச் சொல்லிக்கொடுத்து, எமது சமூகத்தை சிந்தனை ரீதியாக வலுப்படுத்த வளப்படுத்த முடியும் அல்லவா.

முடியுமா..?

12 கருத்துரைகள்:

இயக்க சண்டை வராமல் குத்பா பிரசங்கம் செய்வதன்றால் பழைய லெப்பைகளை கொண்டு வந்து தனி அரபியில் இருக்கும் பழைய மொட்டக் கிதாபை ஓத வேண்டியதுதான் +மக்கள் ஆளுக்கொரு தூணில் சாய்ந்து கொண்டு தூங்குவார்கள்,கட்டுரை வீரன் சவுத்க்காசு அரபு நாட்டு காசு என்று முழங்கிய நீங்கள் அல்லாஹ்வும் தூதரும் சொல்லித்தராத கபுறு வணக்கம் .கத்தம் .அவ்விலியா பேரில் கந்தூரி,இப்ப புதுசாக பள்ளியில் பௌத்த பண ஓதல் இதுவல்லாம் கண்டு கொள்ளவில்லையோ.குர்ஆனையும் நபி வழியையும் எல்லோரும் பின்பற்றும் வரை இந்த இயக்க பிரிவு இருந்து கொண்டே இருக்கும்.அப்ப அதற்கு என்ன வழி உலமா சபையிடம் சொல்லுங்கள் குர்ஆனையும் நபி வழியையும் ஆதாரமாகக் கொண்டு மட்டும் சமாதானத்துக்கும் வணக்க வழிபாடுகளுக்கும் வழிவகுக்கச் சொல்லுங்கள்,ஆரம்பத்தில் இந்த சபை விட்ட குறைகளால்தான் இத்தனை இயக்கம் உருவானது.இப்போது அவர்கள் ஒன்றும் தெரியாவர்கள் போல் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்,கட்டுரை வீரர் அவர்களே கடந்த காலத்து நிலைமையை திரும்பி பார்த்தால் உங்களுக்கு புரியும்.அதேவேளை நீங்கள் நடுநிலை பேணாத விலைபோனவராக அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டவராக இருந்தால் உங்களுக்கும் அறவே மண்டையில் ஏறாது

Yes Bro You are million times correct.

The author of this article wants go back to 'do what lebbe or fathiha alim say'... mot to do what Allah or prophat say... funny idiots.

பெரும்பாலான நடுநிலையான சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்கள் உங்கள் கருத்தை ஆதரிப்பார்கள் ஆனால் சமூகத்திற்கு என்ன நடந்தால் என்ன சவ்தி பணத்தால் எனது பக்கட் நிறைந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இதிலும் பிழை காண்பார்கள். மிக அருமையான கடட்டுரை. இயக்க முறன்பாடுகளை மறந்து ஓர் தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாகும்.

நீங்க மட்டும்தான் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றுகின்றீர்கலோ? ஒவ்வொரு இயக்கமும் இதைத்தானே சொல்கின்றது. புதிய இயக்கங்களின் வருகையின் பின்தானே இவ்வளவு முறன்பாடுகள். இதற்கு முன் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம்.அமெரிக்காவும் இஸ்ரேலும் எமது பரம விரோதிகள் என்கின்ற நச்சிக்கருத்தை வஹாபிசத்தின் பெயரால் எமக்குச்சொல்லி விட்டு அவர்கலுடன் கல்ல உறவாடும் சவ்தியின் கொள்கையால் எமக்கு எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை.

98. ஒற்றுமை எனும் கயிறு தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் (3:103) மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர். "ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர். இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை. "அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்" என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது. "குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்" என்று இவர்கள் நேர்மாறான விளக்கத்தைத் தருகின்றனர். அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும். ஒற்றுமை வாதம்தான் மனித குலத்தை நாசப்படுத்தும் நச்சுக் கிருமியாகும். அயோக்கியர்களையும் நல்லவர்களையும் சமநிலையில் நிறுத்தும் இந்த வாதம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது. அல்லாஹ்வை வணங்கு எனக் கூறினால் அதனால் ஒற்றுமை கெடாது. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது எனக் கூறினால் உடனே ஒற்றுமை கெடும். ஆனால் இஸ்லாம் ஒற்றுமைக்கு எதிரான இந்த நெகடிவ் - எதிர்மறை அடிப்படையில் தான் தனது ஏகத்துவக் கொள்கையை அமைத்துள்ளது. சிலை வணங்குபவனிடம் போய் இதை வணங்காதே எனக் கூறினாலும், தர்கா வணங்கியிடம் தர்காவை வணங்காதே எனக் கூறினாலும், மனிதனை வணங்குபவனிடம் இவனை வணங்காதே எனக் கூறினாலும் உடனே ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடும். ஆனாலும் அதைத் தான் இஸ்லாம் மனித குலத்துக்கு போதிக்கிறது. தீமையை தடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. நிச்சயம் இது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கவே செய்யும். தீமைக்கு உதவாதீர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு உலை வைக்கவே செய்யும். சொந்த பந்தங்களை விட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும் குர்ஆன் கூறுகிறது, இதுவும் ஒற்றுமைக்கு எதிரானது தான். அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட அனைவரும் சேந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட அனைவரும் சேர்ந்து அயோக்கியத்தனங்கள் செய்வதை விட நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவே இஸ்லாம் வழங்கப்பட்டது. தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும் வளைந்து கொடுப்பவர்களும் கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம் ஒற்றுமைவாதம் என்னும் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கிருமியை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும்.

ஐயா சேர் பெரியவரே நீங்கள் ஏன் சவுதிக்காறனையும் ஏனைய அரபு நாட்டு அரபிகளையும் பின்பற்றவோ வழிகிட்டியாகவோ பார்க்கீன்றீர்கள் எட்டு வருடம் மத்ரசாவில் ஓதி கிதாபு பிரட்டிய அரபு படித்த மௌலவி என்று நீட்டு ஜுப்பாவும் நீட்ட தலைப்பாகையும் கட்டிக்கொண்டு திரியும் இவர்களுக்கு ஆராய்ந்து பார்த்து குர்ஆனும் ஹதிசும்தான் மார்க்கம் இடையில் சொருகிய குப்பைகளோ அரபு நாட்டுக்காறனோ இல்லை என்பதை அறிய முழடியாதா?இல்லை ஊரை ஏமாற்ற வேசம் போட்டுக் கொண்டு அலைகின்றார்களா?

நீங்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை 1 அவரவர் இஸ்டப்படி எந்த வழிமுறையை செய்தாலும் ரவாயில்லை பண ஓதுறவன் பண ஓது.கபுறு முட்டி கபுற முட்டிக்கொள் .ஷியாக்கொள்கையுடவன் அதிலே இரு.விரும்பும் வழிகேட்டையும் செய்துகொள்ள வேண்டியது ஆனால் ஆனால் ஒற்றுமையாக இருப்போம் இதுதான் இஸ்லாமா?

உங்கள் கருத்துப்படி இஸ்லாத்தில் ஒற்றுமையாக இருக்க முடியாது? அப்படியென்றால் எல்லா இயக்கங்கலும் அடிச்சிக்கிட்டு சாவுங்க.
நன்கு ஓதிய மவ்லவி மார்கலும் ஒரு விடயத்தில் ஆலுக்கொரு கருத்துகளை சொல்கின்றார்கள். முறன்பாடுகள் வரும்போது நீங்கலும் குர்ஆனை படியுங்ஙகள் என்கின்றார்கள். சரி நாங்கள் படித்து எங்கள் அறிவுக்கு எட்டியதை ததீர்வாகச்சொன்னால் மவ்லவி மார்கள் ஏற்றுக்கொள்வார்கலா? இப்படியான பிரச்சினைகலுக்கு எவ்வாருதான் தீர்வு கான்பது? சமூகத்தில் மார்கம் சம்மந்தமான ஒரு பிரச்சினை வரும்போது அனைத்து மவ்லவி மார்கலும் சேர்ந்து குர்ஆன் கதீசின் அடிப்படையில் தீர்வொன்றினை பொறமுடியாமல் இருப்பதேன்? இயக்க முறன்பாடுகள் உங்களை ஒன்று சேர விடுவதில்லாயா? அல்லது மவ்லவி மார்கலுக்கும் குர்ஆன் பற்றிய அறிவு போதாதா? எவ்வாறுதான் இப்படிப்பட்ட பிரச்சினைகலுக்கு தீர்வு கான்பது? இதனாள் எமது சமூகத்துக்குள்ளும் அடிபட்டுக்கொள்கின்றார்கள் ஏனைய சமூகத்தினருடனும் முறன்பட்டுக்கொள்கின்றார்கள்.இது நீடித்தாள் அழிவைத்தவிர எதுவும் மிஞ்சாது.

excellent reply mustafa jawfer! i appreciate your comments!

the idiot people forget "Shirk is the biggest sin" than anything! and they ready to compromise islam for their peaceful(?) life in this world ignoring the aahiraa!

why dont they read and understand "Sura al Qaafiroon" where Allah orders the prophat muhammad sallallaah alaihiwasallam to away from sharing the faith?

Jamath கார்ர்களும் அதன் சுயநலமிக்க தலைவர்கள் நாம் நல்லதுதானே செய்கிறோம் என்று பறைசாற்றிக்கொண்டு உண்மையில் செய்வது முஸ்லிம் சமூகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வதே!

உலமாக்கல் அதிகரித்தலால் உரவுகள் துண்டிக்கப்பட்டுக்கொண்டிகுக்கிரது. இதனால் இஸ்லாம் வழர்வதற்குப் பதிலாக சீரலிக்கப பட்டுக் கொண்டிருக்கிரது.

Post a Comment