Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான நாசகாரம், பொது­பல சேனாவின் முக்­கிய தேரர்களை விசாரிக்க தீர்மானம்

 MFM.Fazeer

நுகே­கொடை, மஹ­ர­கம பகு­தி­களில் நான்கு முஸ்லிம் கடை­களை தீ வைத்து எரித்­தமை மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதான தீவைப்பு, ஏனைய பகு­தி­களில் முஸ்லிம் கடைகள் மீதான அடா­வ­டிகள் தொடர்பில் பொது­பல சேனாவின் முக்­கிய தேரர்கள் பலரை விசா­ரணை செய்ய சிறப்பு பொலிஸ் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

நுகே­கொடை, மஹ­ர­கம பகு­தி­களில் நான்கு முஸ்லிம் கடை­களைத் தீ வைத்து எரித்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபரை விஷேட தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் விசா­ரணை செய்து வரும் சிறப்புப் பொலிஸ் குழு அவ­ரிடம் இருந்து வெளிப்­படுத்­தி கொண்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

தேரர்­க­ளுக்கு மேல­தி­க­மாக பொது­பல சேனாவில் இணைந்து செயற்­பட்டு வரும் பல முக்­கி­யஸ்­தர்­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லகப் பிர­தா­னி­யு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜயக்­கொடி கேச­ரிக்கு தெரி­வித்தார்.

மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான, குற்றம் மற்றும் போக்­கு­வ­ரத்து விவ­கா­ரங்கள் குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில், மேல் மாகா­ணத்தின் தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த சம­ர­சிங்­கவின் மேற்­பார்­வையில் நுகே­கொடை பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரசாத் ரண­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணையில் நுகே­கொட, மஹ­ர­கம பகு­தி­களில் கடைக்கு தீ வைத்த சந்­தேக நபர் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்டார்.

32 வய­தான திரு­ம­ண­மா­காத குறித்த சந்­தேக நபர் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு மிக நெருக்­க­மா­னவர் என அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யி­ருந்­தது.

இந் நிலையில் 90 நாள் விஷேட தடுப்புக் காவலின் கீழ் குறித்த சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ரணை செய்யும் சிறப்பு பொலிஸ் குழு மேலும் பல அதிர்ச்சித் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது.

அதன்­படி குறித்த சந்­தேக நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்­போது வரை மிக நெருக்­க­மாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும், அந்த அமைப்­புடன் தொடர்பிலுள்ள மேலும் சில இன­வாத கும்­பல்­களின் தலை­வர்­க­ளு­டனும் அவர் நெருக்­க­மான உற­வினைப் பேணி வரு­வதும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன­தா­கவும், கைதாகும் போது உண­வ­கத்தில் சேவை­யாற்­றிய குறித்த நபர் இரு வரு­டங்கள் இரா­ணு­வத்தில் சேவை­யாற்­றி­யவர் எனவும் மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

 அத்­துடன் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணி­யுள்ள மேற்­படி சந்­தேக நபர்   ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்கு எதி­ராக கடந்த வாரத்­துக்கு முதல் வாரம் பொரளை பகு­தியில் இடம்­பெற்ற ஆரப்­பாட்­டத்தில் மிக ஆக்­ரோ­ஷ­மாகச் செயற்­பட்­டவர் என்­பதும் 2014 முதல் இது­வரை பொது­பல சேனா தொடர்பு பட்ட அத்­தனை சம்­ப­வங்­க­ளிலும் இவ­ரது பங்­க­ளிப்பு உள்­ளது என்­பதும் விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­விட பொது­பல சேனா­வுடன் தொடர்­பு­டைய மேலும் பல சிறிய குழுக்கள் உள்­ளன. அந்த குழுக்­களின் தலை­வர்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டுள்ள மேற்­படி சந்­தேக நபர் மிக நெருக்­க­மான தொடர்­பினைக் கொண்­டி­ருந்தார் என்­ப­தற்­கான ஆதா­ரங்­களும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

 இந் நிலையில் மேல­திக விசா­ர­ணை­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தீ வைப்பு மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உள்­ளிட்ட வன்­மு­றை­களில் பொது­பல சேனாவின் பல­ரது கரங்கள் பின்­ன­ணியில் இருந்தும் நேர­டி­யா­கவும் தொடர்­பு­பட்­டுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார். அதன்­படி வெகு விரைவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­பல சேனாவின் முக்­கி­யஸ்­தர்கள் பலரை முஸ்லிம் எதிர்ப்பு வன்­மு­றைகள் குறித்து விசா­ரணை செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர்­களில் அவ்­வ­மைப்பின் பல முக்­கிய தேரர்­களும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

 குறித்த சந்­தேக நபர் தொடர்பில் உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற சிறப்புத் தக­வல்கள், கடந்த ஜூன் நான்காம் திகதி நுகே­கொடை -விஜே­ராம பகு­தியில் பெஷன் லெதர் எனும் வர்த்­தக நிலை­யத்­துக்கு தீ மூட்டும் சி.சி.ரி.வி. காட்­சி­களை மையப்­ப­டுத்தி குறித்த சந்­தேக நபரைக் கைது செய்ய முடிந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

 குறிப்­பாக தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள சந்தேக நபர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அதிகாலை மஹரகம நகரில் உள்ள காபட் மற்றும் லெதர் விற்பனை நிலையம் மீதும், மறு நாள் மே 23 ஆம் திகதி மஹரகம நாவின்ன பகுதியில் உள்ள ஹார்கோட் பார்மஷி மீதும், கடந்த நான்காம் திகதி விஜேராம பகுதியில் உள்ள பெஷன் லெதர் எனும் வர்த்தக நிலையம் மீதும் நேற்று முன் தினம் அதிகாலை மஹரகம ஹைலெவல்  வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ எனும் பாதணி விற்பனை நிலையம் மீதும் தீ வைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

2 comments:

Powered by Blogger.