Header Ads



ரணில் வந்திறங்கியதும், பேசப்பட்ட முஸ்லிம் விவகாரம், ஆரம்பித்துவைத்த பொன்சேக்கா


-SNM.Suhail-

சிகிச்சை மற்றும் இரா­ஜ­தந்­திர விஜ­யத்தை மேற்­கொண்டு அமெ­ரிக்­கா­வுக்கு சென்று நேற்­று­முன்­தினம் நாடு திரும்­பிய பிர­த­ம­ரிடம் அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் மோச­ம­டைந்­துள்ள இன­வாத செயற்­பா­டுகள் குறித்து ஐ.தே.க. எம்.பி.க்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

நேற்­று­முன்­தினம் மாலை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து விமானம் மூலம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை வர­வேற்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமான நிலை­யத்தின் விஷேட அதி­தி­க­ளுக்­கான வெளி­யேறும் பகு­திக்கு சென்­றி­ருந்­தனர். 

பிர­தமர் வந்­த­டைந்­ததும் நாட்டு நிலை­மைகள் குறித்து அங்கு கதை­யாடல் இடம்­பெற்­றது. இதன்­போது, அமைச்சர் பீல்ட்­மார்ஷல் சரத்­பொன்­சேகா, தற்­போது நாட்டில் இடம்­பெற்­று­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனவாத செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தும் பிர­த­ம­ரிடம் வின­வினார்.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இதன்­போது, தற்­போது இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் குறித்து பிர­த­ம­ரிடம் விப­ரித்­துள்­ளனர். இது­கு­றித்து கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்தி ஆராய்­வ­தாக பிர­தமர் விமான நிலை­யத்தில் தெரி­வித்­த­துடன் அங்கு பொலிஸ்மா அதி­ப­ரு­டனும் கலந்­து­ரை­யா­டினார்.

2 comments:

  1. நம்பிட்டோம்!!!???? முதலில் நாம் இந்த எச்சைப்பொறுக்கிகளைக் தூக்கி எரியனும்

    ReplyDelete
  2. Ranil and his team worried about their days........

    ReplyDelete

Powered by Blogger.