June 07, 2017

கட்டார் மீது பாய்பவர்கள், இதையும் வாசியுங்கள்

-Dilshan Mohamed-

வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய தளம் கட்டாரில் இருக்கிறதாமே. அதனால்தான் இந்த தடையாமே !

வளைகுடா நாடுகளில் இருக்கின்ற அமெரிக்க இராணுவதளங்கள்

1. அல் உதேயிட் விமானதளம் – கட்டார். 
2. அஹ்மத் அல் ஜாபிர் விமானதளம் -குவைத் 
3. அலி அல் சாலிம் விமானதளம் – குவைத் 
4. கேம்ப் பேட்ரியட் – குவைத் 
5. செய்க் இஸ்ஸா விமானதளம்- பஹ்ரைன் 
6. அமேரிக்கா 5வது கடற்படை கட்டளை தலைமையகம்(5th Fleet HQ)- பஹ்ரைன்
7. மசிராஹ் விமானதளம் – ஓமான்
8. அலி முசனனாஹ் விமானதளம்- ஓமன் 
9. துமைத் விமான தளம்- ஓமான்
10. சீப் விமான தளம் – ஓமான்
11. புஜைராஹ் கடற்படை தளம் – UAE
12. அல் தப்ரா விமானதளம்- UAE
13. துபுக் விமானதளம்- சவூதி அரேபியா
14. ரியாத் விமானதளம்- சவூதி அரேபியா
15. எஸ்கன் வில்லேஜ் விமானதளம் – சவூதி அரேபியா
16. தாயிப் விமானதளம்- சவூதி அரேபியா
17. ஜித்தா விமானதளம்- சவூதி அரேபியா

இதில் கட்டாரில் ஒரேயொரு தளமிருப்பதால்தான் பல தளங்களை வைத்திருக்கும் நாடுகள் தடை செய்ததாமா ??  :D :D

ஈரானோடு நல்லுறவை ஏற்படுத்த போவதாக கட்டார் அறிவித்ததாமே – அதனால்தான் இந்த தடையாமே !!

பொருளாதார, அரசியல், பாதுகாப்பு, கலாச்சார விடயங்களில் ஈரானோடு மிகவும் நெருங்கி உறவுடைய வளைகுடா நாடுகளில் முதன்மையானது குவைத், அடுத்ததாக ஓமான், அதற்கு அடுத்ததாக அபுதாபி. இதுபோக, ஈரானுக்கும் சவுதிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு சென்ற வருடம் (24 -Janurary 2016) தெஹ்ரானில் இருந்த சவூதி அரேபியா தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னாரே முறிவடைந்தது.

இஸ்ரேல் தலைவர் கட்டார் வந்துபோகிறாராமே !!அதனால்தான் இந்த தடையாமே!!

இஸ்ரேலோடு மிகவும் நெருங்கிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகளை வைத்திருக்கும் அரபு நாடுகளில் முதன்மையானது எகிப்து இரண்டாவது ஜோர்தான்.

இப்படியான சிறுபிள்ளைத்தனமான தகவல்கள் கறிக்கு உதவாது. ஆனாலும் GCC இன் பெரியண்ணாவான சவூதி அரேபியா வரலாற்றில் இருந்து பாடம் கற்காமல், தனது வரட்டு கௌரவத்திர்காக 15 வருடங்களுக்குள் மூன்றாவது முறையாக அதே வரலாற்று தவறை மீண்டும் செய்திருக்கிறது என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

முதலாவது தவறு – சதாம் ஹுசைன் என்ற தனிநபர் மீதிருந்த குரோதத்தால் 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான ஆக்கிரமிப்புக்கு எந்தவித நிபந்தைகளும் இல்லாமல் GCC ஐ ஆதரவளிக்க வைத்தமை. இந்த தவறில் இருந்து ஈராக் இன்னும் மீளவில்லை.

இரண்டாவது தவறு- ஏமனில் அப்துல்லாஹ் ஸாலிஹ்ஹின் ஆட்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கொடுத்து வந்தது மட்டுமல்லாமல் லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஹூத்திகளை நாட்டுபற்றுமிக்கவர்கள் என்று பாராட்டிவிட்டு, அரசியல் ரீதியில் முடித்திருக்கவேண்டிய பிரச்சினையை இராணுவ ரீதியான சிக்களாக மாற்றி ஹுத்திகளுக்கும் அப்துல்லாஹ் சாலிஹுக்கும் எதிராக யுத்தம் என்ற பெயரில் GCC இன் விமானபடையின் தாக்குதல்களால் GCC உறுப்புரிமை நாடான யேமன் நாட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழை மக்களை கொலைசெய்து வருகின்றமை.

மூன்றாவது தவறு- GCC இன் உறுப்புரிமை நாடான கட்டாருடனான அரசியல் பிரச்சினையை பேசி தீர்ப்பதை விட்டுவிட்டு பொருளாதார போக்குவரத்து தடைகள் விதித்தமை.

ஈராக் ஆக்கிரமிப்புக்கு GCC இன் ஆறு நாடுகளும் ஒத்துழைத்தன. யேமன் ஆக்கிரமிப்புக்கு GCC இன் நான்கு நாடுகளே ஒத்துழைத்தன. 

கட்டார் தடைக்கு GCC இன் மூன்று நாடுகளே முழுமையாக ஒத்துழைத்திருக்கின்றன. நாளை இன்னொரு பிரச்சினை வந்தால் GCC இன் இரண்டு நாடுகள் ஒத்துழைக்கும். இறுதியில் GCC இன் வாழ்வு முற்றுப்பெறும்.

5 கருத்துரைகள்:

மக்காவையும் மதினாவையும் நாம் பரிபாலனம் செய்கிறோம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு உலகில் எங்கும் இல்லாத மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் சவுதில்தான் நடக்கிறது,இவ்வளவு காலமும் நடித்து வந்த மன்னரின் உண்மை முகத்திரை கிழிக்கப்பட்டு இப்போதுதான் இவர்கள் யார் என்பது உலக முஸ்லிம்களுக்கு புரிய வந்திருக்கிறது,யுத்தம் நடக்கும் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மேற்கத்திய நாடு அரவணைத்துக் கொண்டது அதே போன்று கட்டாரும் பாதிக்கப்பட்ட அரபு நாட்டு முஸ்லீம்களுக்கு ஆதாரவு கொடுத்து அல்லாஹ்வுக்காக உதவி செய்து வருகிறது ,இதில் பலஸ்தீன் மக்கள் .சிரியா மக்கள் ,எதிப்து போன்ற நாடுகள் அடங்கும் இதைப் பொறுக்க முடியாத இஸ்ரவேல் அமெரிக்காவுன் சொல்லி அமெரிக்கா சவுதியிடம் சொல்லி நாடகத்தை அரங்கேற்றுகிறது,இந்த முஸ்லிம்களுக்கு கட்டாரின் ஆதரவை துண்டித்தாலும் அல்லாஹ் துண்டிக்க மாட்டான் என்பதை சவுதி புரியவில்லையா அல்லது மதவி மமதையில் விளங்கவில்லையா? எமனையும் எமென் அரசாங்கத்தையும் காப்பாற்ற கூட்டுப்படையோளடு களமிறங்கிய சவுதி ஏன் இத்தை அறுபது வருடமாக முதல் கிப்லாவை மீட்டடுக்க போராடும் பலஸ்தீனை காப்பாற்ற கூட்டுப்படையை உருவாக்கி இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கவில்லை,இவார்களிடம் வெள்ளை தோப்பும் ,தலையில் குத்ராவும் இருக்கிறதே தவிவிர ஈமான் என்பதும் இறையச்சமும் கேள்விக்குறிதான்,

Mustafa jafer!Brother what i want to say here that all you mentioned.

WELL ,I ACCEPT AND AGREE WITH JAWFER BROTHER'S ARTICLE.THIS IS THE TRUE SITUATION HAPPENING IN THE SAUDI ARABIA

முஸ்தபா ஜவ்பருக்கு இப்பவாவது தன் காெள்கை சார்ந்த நாடு யாரின் கட்டுபாட்டில் இருக்கிறது என்பது புரிந்தால் சரி

தன் கொள்கை சார்ந்தவன் எதை செய்தாலும் செரி காணா வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை அவர்கள் பிழை செய்தால் பிழை என்று தான் சொல்ல வேண்டும் நல்லதை எதிரி செய்தாலும் செரி காண வேண்டுமே தவிர எதிரி என்பதற்காக தட்டிக் கழிக்க முடியாது mr,yaseer

Post a Comment