June 09, 2017

முஸ்லிம் கடைகளுக்கு தீ - திட்டமிட்ட குழு செயற்படுகிறது

-MFM.Fazeer-

மஹ­ர­கம மற்றும் நுகே­கொட பகு­தி­களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நான்கு கடை­க­ளுக்கு தீவைத்த சந்­தேக நபர் நேற்­றுமுன் தினம் கைது செய்­யப்­பட்டார். இத­னி­டையே, திரு­கோ­ண­மலை பெரி­ய­கடை பள்­ளி­வா­ச­லுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்­குதல் நடத்­தியவரும் நேற்­றைய தினம் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தெஹி­வளை பகு­தியில் ஹோட்டல் ஒன்றில் சேவை­யாற்றி வரும் 33 வய­து­டைய கசுன் குமார எனும் நுகே­கொடை - கங்­கொ­ட­வில பகு­தியைச் சேர்ந்த நபரே இவ்­வாறு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

 குறித்த சந்­தேக நபர் தொடர்பில் உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற சிறப்புத் தக­வல்கள், கடந்த நான்காம் திகதி நுகே­கொடை - விஜே­ராம பகு­தியில் பெஷன் லெதர் எனும் வர்த்­தக நிலை­யத்­துக்கு தீ மூட்டும் சி.சி.ரி.வி. காட்­சி­களை மையப்­ப­டுத்தி குறித்த சந்­தேக நபரைக் கைது செய்ய முடிந்­த­தாக  குற்­ற­வியல் விவ­கா­ரங்கள் தொடர்­பி­லான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 நேற்று முன் தினம் இரவு கைது செய்­யப்­பட்­டுள்ள குறித்த சந்­தேக நப­ரிடம், கடை­க­ளுக்கு தீ வைத்­ததன் பின்­னணி, அதற்­கான காரணம் தொடர்பில் தனிப்­படை பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

 இந்த சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் திட்­ட­மிட்ட குழு­வொன்று இருப்­ப­தற்­கான சாத்­தியக்கூறு­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்ள பொலிஸார், அத்­த­கைய திட்­ட­மிட்ட குழு­வொன்று செயற்­படின் அந்த குழு, வலை­ய­மைப்பை சட்­டத்தின் பிடிக்குள் கொண்டு வர விரி­வான விசா­ரணை ஒன்­றினை குற்­ற­வியல் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான நந்­தன முன­சிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

 குறிப்­பாக தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள  சந்­தேக நபர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அதி­காலை மஹ­ர­கம நகரில் உள்ள காபட் மற்றும் லெதர் விற்­பனை நிலையம் மீதும், மறு நாள் மே 23 ஆம் திகதி மஹ­ர­கம நாவின்ன பகு­தியில் உள்ள ஹார்கோட் பார்­மஸி மீதும், கடந்த நான்காம் திகதி விஜே­ராம பகு­தியில் உள்ள பெஷன் லெதர் எனும் வர்த்­தக நிலையம் மீதும்  நேற்று முன் தினம் அதி­காலை மஹ­ர­கம ஹைலெவல்  வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ எனும் பாதணி விற்­பனை நிலையம் மீதும் தீ வைத்து நாச­கார செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளமை நேற்று நண்­பகல் வரை செய்­யப்­பட்ட விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யி­ருந்­தது.

 கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை கங்­கொ­ட­வில நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் படுத்த பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்த நிலையில், நாச­கார செயற்­பா­டுகள் தொடர்பில் விசா­ரணை செய்யும் தனிப்­படை பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை தொடர்­கின்­றனர்.

இது இவ்­வா­றி­ருக்க, கடந்த 3 ஆம் திகதி திரு­கோ­ண­மலை பெரி­ய­கடை ஜும்ஆப் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யவர் நேற்­றைய தினம் கைது செய்­யப்­பட்டார்.

திரு­கோ­ண­மலை மிஹிந்தபுர பிர­தே­சத்தை சேர்ந்த 22 வய­து­டைய சதீஸ் குமார் என்­பவர் நேற்று திரு­கோ­ண­மலை துறை­முக பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு திரு­கோ­ண­மலை மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

திரு­கோ­ண­மலை மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சித்­தி­ர­வேலு சுபாசின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பெரியகடை பள்ளிவாசல் தாக்குதலின் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது குறித்து திருகோணமலை துறைமுக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1 கருத்துரைகள்:

அந்த குழுவின் விபரம் வெளியே வராது... அதற்கு இந்த நல்லாட்சி அனுமதிக்காது...அறிக்கை மன்னன் அசாத் சாலி சொல்லுவார் சம்பந்தப்பட்ட நபரை இந்த ந(க)ல்லாட்சி கைது செய்துள்ளது. மேலதிகாரிகள் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிப்பார்கள்... முடிவு தெரியாது.

Post a Comment