Header Ads



"தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை, கத்தார் நிறுத்த வேண்டும்" - டிரம்ப்

தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு துணை புரிவதாக கத்தார் நாடு மீடு எழுந்துள்ள குற்றச்சாட்டால் சவுதி, எகிப்து, பக்ரைன், அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்தார் நாட்டின் செயல் குறித்து பேசியுள்ள டிரம்ப், தீவிரவாதத்துக்கு நிதியளிப்பதை அந்நாடு நிறுத்தி கொள்ள வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும், மனிதர்களே மனிதர்களை கொல்லும் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று கூட அழைப்பு விடுப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக கத்தாருக்கு ஆதரவாக துருக்கி தனது ராணுவப் படைகளையும், உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தர முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. டிரம்ப் சொல்வதை முதலில் அமுல்படுத்த வேண்டுமானால், இஸ்ரவேலுக்கு அமெரிக்கா நிதியளிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. Mr. Trump you know. Who is the number one terrorist,Criminals and Drug, Oil mafia in the World. I'm said to you Isralian Zionist and 13 family in your country it's true or not. Allah is Grate and Grater king in whole earth and milkyway.

    ReplyDelete
  3. 3ஆம் உலகப்போர் கத்தாரிலுள்ள அமேரிக்கன் பேஸை அழிப்பதிலிருந்து ஆரம்பிக்கட்டும்...

    ReplyDelete

Powered by Blogger.