Header Ads



ஹமாஸையும், இக்வான்களையும் கைவிட்டால்தான் கட்டாரை சேர்த்துக்கொள்வோம் - சவூதி அரேபியா

-அஷ்கர் தஸ்லீம்-

இப்போது கட்டாருடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்துள்ள வளைகுடா நாடுகள், மீண்டும் கட்டாருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், ஹமாஸ் மற்றும் இக்வானுல் முஸ்லிமூன் அமைப்புக்களுக்கு கட்டார் வழங்கி வரும் ஆதரவை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சவூதி வெளியுறவு அமைச்சர் ஆதில் அல்ஜுபைர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை வாசிக்கும்போது சிரிப்பு வருகின்றது. ஆனால், இதற்கெல்லாம் வாயால் சிரிக்க முடியாது. சிங்கள மொழியில் சொல்வதென்றால், “மேவட புகென் தமை ஹினாவென்ன ஓனெ”… நாம் கட்டாருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நின்று எழுதும்போது, சவூதியை முஸ்லிம்களது காவலனாக நிறுத்தி கருத்துச் சொல்லும் அன்பர்கள், சவூதி வெளியுறவு அமைச்சரின் இந்த அறிவிப்பை பார்த்து என்ன சொல்லப் போகிறார்களோ தெரியாது!
உண்மையில், கட்டாருடனான இராஜதந்திர உறவு முறிப்புக்கு பின்னால் பல்வேறு காரணிகள் நிலவுகின்றபோதும், கட்டார் ஹமாஸுக்கும், இக்வான்களுக்கும் வழங்கி வரும் ஆதரவுதான் பிரதான காரணி என்பதை சவூதி வெளியுறவு அமைச்சரின் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.
இப்போது நாம் சவூதிதான் முஸ்லிம்களின் காவலன் என்று கொக்கரிக்கும் அன்பர்களிடம் கேட்க விரும்புவதெல்லாம், உண்மையில் சவூதி முஸ்லிம்களின் காவலன் என்றால் ஏன் பலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸுக்கு கட்டார் வழங்கும் ஆதரவை நிறுத்தச் சொல்கிறார்கள்? அப்படியென்றால், சவூதி இஸ்ரேலின் அடிமையா? இஸ்ரேலின் நலனை மையப்படுத்தித்தான் முடிவெடுக்கின்றதா?
இன்று பிரான்ஸில் ஊடகவியலாளரிடம் பேசியுள்ளபோதே சவூதி வெளியுறவு அமைச்சர் ஆதில் அல்ஜுபைர் கட்டார் விவகாரம் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்டார் தீவிரவாத குழுக்களுக்கு வழங்கும் ஆதரவு, கட்டாரின் ஊடகங்கள் மற்றும் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் கட்டாரின் தலையீடு தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் கட்டார் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதை நாம் காண வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டாரை இலக்கு வைப்பதற்கான பிரதான காரணங்களையே அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஹமாஸுக்கு கட்டார் வழங்கும் ஆதரவு, அல்ஜஸீரா ஊடகம், எகிப்திய இக்வான்களுக்கு வழங்கும் ஆதரவு என்பனவே அவையாகும்.
சவூதி அரேபியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட இந்த நாடுகளை தூங்க விடாது தடுக்கின்ற கட்டாரின் முக்கிய ஆயுதம் அலஜஸீராவாகும். அரபு வசந்த புரட்சிகள் வெடித்தபோது, அப்புரட்சியை வழிநடத்திய மக்களின் குரலாக நின்று, மக்கள் கருத்தை மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் கொண்டுபோன பெருமை அல்ஜஸீராவை சாரும். அது மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கான எமிரேட்ஸ் தூதுவர் யூசுஃப் அல்உதைபாவின் ஈமெயில் ஊடுருவப்பட்டு வெளிக்கொணரப்பட்ட தகவல்களை வைத்து, எமிரேட்ஸை போட்டு தாக்கியது வரையிலும் அதன் செயற்பாடுகளும், சாகசங்களும் தொடர்கின்றன. இந்த அல்ஜஸீராவை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்ற தேவையும் சவூதி அரேபியாவுக்கும், எமிரேட்ஸுக்கும் உள்ளது. இதே இலக்கை அமெரிக்காவும், இஸ்ரேலும்கூட கொண்டிருக்கின்றது. ஒபாமாவின் ஆட்சியின்போது அல்ஜஸீரா குறித்து ஹிலாரி கிளின்டன் பேசிய கருத்துக்கள் மிகவும் பிரபலமானவை.
இந்தக் கருத்துக்கள் மட்டுமல்லாது, ஆதில் ஜுபைர் இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் ஹமாஸ், இக்வானுல் முஸ்லிமூன் அமைப்புக்கள் தொடர்பில் பேசியுள்ளார். அதாவது, ஹமாஸுக்கும், இக்வான்களுக்கும் கட்டார் ஆதரவு வழங்குவதால், பலஸ்தீன அதிகார சபையையும், எகிப்தையும் கட்டார் தாழ்த்திப் பார்ப்பதாக சவூதி வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அரபுலகில் செல்வாக்குமிக்க அரசியல் குழுவான இக்வான்களும், ஹமாஸும் அதிகாரத்துக்கு வந்து, கிட்டத்தட்ட ஒரே சிந்தனையுடனும், ஒரே இலக்குடனும் இயங்குகனி;ற துருக்கி, கட்டார் ஆகிய நாடுகளுடன் இணைந்துகொண்டால், சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கதி என்னவாகும் என்ற அச்சமே இவர்களைப் பீடித்துள்ளது. இதேநேரம், இஸ்ரேலுக்கும், மேற்குலகுக்கும்கூட இதே அச்சம் நிலவுகின்றது.
சவூதி வெளியுறவு அமைச்சரின் கருத்துப்படி பார்த்தால், இஸ்ரேலின் அடாவடித்தனங்களையும், அக்கிரமங்களையும் அங்கீகரித்தவாறு, இஸ்ரேலுடன் இணைந்து செயற்படும் அப்பாஸின் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபைக்கும், எகிப்தில் இஸ்லாமியவாதிகளை ஒடுக்கும் அப்துல் பத்தாஹ் ஸீஸி என்ற கோமாளிக்கும் கட்டார் ஆதரவு வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்குத்தானே இந்த இராஜதந்திர முறிவு!?
சவூதியும், எமிரேட்ஸும் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொண்டது முதல் இஸ்ரேலிலிருந்து வெளிவரும் செய்திகள், இந்த முடிவை வரவேற்பதாகவும், இனி மத்திய கிழக்கில் இஸ்ரேலின் எதிரி கட்டார் என்பதுவாகவுமே இருக்கின்றது. எப்படி இஸ்ரேலும், எமிரேட்ஸும், சவூதியும் ஒரே புள்ளியில் இணைகின்றன என்பதைப் பாருங்கள்.
ஹமாஸுக்கு கட்டார் வழங்கி வரும் ஆதரவை நிறுத்த வேண்டும் என்று சவூதி அரேபியா தெரிவித்திருக்கும் கருத்து, தம்மை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிது. இன்று வெளியிடப்பட்டுள்ள ஹமாஸின் ஊடக அறிக்கையில், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஆதில் அல்ஜூபைரின் கருத்துக்கள் பலஸ்தீனர்களையும், அரபு இஸ்லாமிய நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இஸ்ரேலானது பலஸ்தீனர்கள் மீது; வன்முறைகளை கட்டவிழ்ப்பதற்கு இந்த கருத்துக்களை பயன்படுத்திக்கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் மூன்றாவது புனிதஸ்தலமும், முதலாவது கிப்லாவும் அமைந்திருக்கின்ற பலஸ்தீன பூமியை மீட்டெடுப்பதற்காகப் போராடும் ஹமாஸ் அமைப்பை ஒடுக்குவதற்கு, எமிரேட்ஸும், இஸ்லாத்தின் இரு புனிதஸ்தலங்களை கொண்டிருக்கின்ற சவூதி அரேபியாவும் என்ன மாதிரியெல்லாம் செயற்படுகின்றது என்பதைப் பாருங்கள்.
இத்தனைக்குப் சவூதி வெளியுறவு அமைச்சர் ஆதில் அல்ஜுபைர் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது, “யாரும் கட்டாரை நோவினை செய்ய விரும்பவில்லை. ஒரே திசையில் பயணிப்பதா? அல்லது வேறொரு திசையில் பயணிப்பதா என்பது குறித்து கட்டார் முடிவெடுக்க வேண்டும். நாம் மிக வருத்தத்துடனேயே இந்த எட்டை எடுத்து வைத்துள்ளோம். எனவே, இந்தக் கொள்கைகள் நிலைத்து நிற்காது, அது மாறும் என்பதை கட்டார் புரிந்துகொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால், கட்டாரை கொஞ்சம் பதட்டத்துக்கு உட்படுத்தி, சற்று அழுத்தங்களைப் பிரயோகித்து, அவர்களது வழிக்கு கொண்டு வருவதற்கே, இந்த இராஜதந்திர முறிவும், வான் மற்றும் தரைவழி தடைகளும்! ஹமாஸுக்கும், இக்வான்குளுக்கும் வழங்கும் ஆதரவை கட்டார் நிறுத்தினால், எல்லாம் சரியாகவிடும் என்பதுதான் சவூதியினதும், எமிரேட்ஸினதும் திட்டம். எவ்வறாயினும், கட்டாருக்கு துருக்கி பக்கபலமாக இருக்கின்றது. இந்த இராஜநத்திர அனர்த்தத்திலிருந்து கட்டார் மிகவு சீக்கிரமே வெளியே வந்து விடும் என்பதே எம் எதிர்பார்ப்பு.

8 comments:

  1. இஸ்லாம் எங்கெல்லாம் அரசியல் ரீதியாக பலம் பெற்று எழுகிறதோ அங்கெல்லாம் சஊதியா அரேபிய அரசகுடும்பம் தனது இரும்புக் கரங்கள் கொண்டு அதனை நசித்துவிடும்.

    இஸ்லாத்தின் மிக ஆபத்தான முதல் எதிரி இந்த அரச குடும்பம்தான்.

    ReplyDelete
    Replies
    1. சவுதிய குற்றம் சொல்லுங்க பரவாயில்ல. இஸ்லாம் கட்டார் லயா 2017 ம் ஆண்டின் June மாத Joke கா இது

      Delete
  2. Bitter truth..If Saudi doesn't have the funds to generously spend on Muslims worldwide and doesn't have two holy places, Muslims would have alienated them long ago. Historial alignment of Saud family and the creation of Saudi Arabia is in fact the act of setting up of puppet rulers in the heart of the Muslim world done by British a century ago. Now we are paying the price of it

    ReplyDelete
  3. In otherwords Saudi formally announces that it has no longer the MORAL COMMITMENT TO safeguard Muslim umma otherthan custodian of Haramain n donation of dates during Ramadan . It has become mouthpiece of Zionist .No worries . IT is not the end of world. Umma has gone through many a trial n tribulation .
    Allah SWA has blessed us with resilient n fortitude.

    Hasnunallah Wanimal Wakeel.

    ReplyDelete
  4. தனக்கு வேண்டியவேரொடு சினேகிதம் வைத்துக்கொள்ளுவதட்கு அவராவர் நாட்டுக்கு உரிமையுண்டு அதை யாருக்கும் கட்டுப்படுத்த முடியாது.நினைத்தேன் சவூதிகாரன் இப்படியொரு நாய்வேளையே செய்வான்னென்று அதே மாதிரி நடந்திச்சி.

    ReplyDelete
  5. It is shame on you big brother(?) Saudi!!!!

    ReplyDelete
  6. இந்த விடயங்கள் சுட்காட்டுவது என்னவெனில் முஸ்லிமகளின் பிரச்சினைகளை கட்டார் தேசம் கவணத்தில் எடுத்து அதற்குறிய சரியான சானக்கியமிக்க முறையை கையாண்டு பல பிரச்சினைகளை தீர்துவைப்பதை சவுதிஅரேபியாவின் தற்போதய ஆட்சியாளர்களால் பொருத்துக்கொள்ள முடியாமல் வந்த விளைவுதான் இந்த பிரச்சினை அரபிகளுக்கு எப்போதும் அனைத்திலும் கௌவுரவ பிரச்சினைகள் உண்டு!

    ReplyDelete
  7. muthalla pothu pala senavukku mudivu sollunga neenga vaai kiliya kaththinaalum saudikku onrum maagathu

    ReplyDelete

Powered by Blogger.