Header Ads



லசித் மாலிங்கவின் சிறந்த ரசிகன்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தான் லசித் மாலிங்கவின் சிறந்த ரசிகன் என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் கடந்த வருடம் (2016.06.28) எடுக்கப்பட்டதாகவும், லசித் தன்னை சந்திக்க வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு லசித் மாலிங்க கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

மேலும், மாலிங்க மீது நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையை அடுத்து அவருக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடத் தடையுடன் அடுத்துவரும் சர்வதேச ஒருநாள் போட்டி ஊதியத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறியமைக்காகவே ஒத்திவைக்கப்பட்ட தடையுடன் அபராதமும் விதிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.