Header Ads



மஹியங்கனையில், முஸ்லிம் கடைகளுக்கு எச்சரிக்கை

 ARA.Fareel

இன­வா­தி­களால் மஹி­யங்­க­ணையில் முஸ்லிம் கடை­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டமை குறித்து பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.


இதே­வேளை, மஹி­யங்­கனை நகரில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான ‘ரிச் சூ பெலஸ்’ எனும் பாத­ணிகள் விற்­பனை நிலையம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் தீ இட்டு எரிக்­கப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள முஸ்லிம் கடை உரி­மை­யா­ளர்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளனர். 



தமது கடை­களும் இலக்கு வைக்­கப்­ப­டலாம் என்ற பயத்­தினால் பொலிஸ் பாது­காப்பு கோரி­ய­தை­ய­டுத்து மஹி­யங்­கனை நக­ருக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 



பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிம் கடை உரி­மை­யா­ளர்கள் சில­ரிடம் ‘என்ன செய்­கிறோம் பாருங்கள் இங்­குள்ள புடைவைக் கடை­க­ளுக்கும் ஏனை­ய­வற்­றுக்கும் இதே கதிதான் நடக்கும் என்று அச்­சு­றுத்­தி­ய­தை­ய­டுத்து இச் சம்­பவம் முஸ்லிம் கடை உரி­மை­யாளர் ஒரு­வ­ரினால் மஹி­யங்­கனை பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.



சந்­தேக நபரின் பெயர் உட்­பட விப­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து நேற்று நண்­பகல் பொலிஸார் சந்­தேக நப­ரையும் முறைப்­பாடு செய்­த­வ­ரையும் விசா­ர­ணைக்­காக பொலிஸ் நிலையம் அழைத்­தி­ருந்­தனர். 



சந்­தேக நபர் மஹி­யங்­கனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி புஷ்­ப­கு­மா­ர­வினால் எச்­ச­ரிக்­கப்­பட்டார். இவ்­வா­றான கருத்­துக்­க­ளி­னாலே வன்­செ­யல்கள் உரு­வா­கின்­றன. இதன் பிறகு இவ்­வா­றான கருத்­துகள் வெளி­யிட்டால் கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் எனவும் எச்­ச­ரிக்­கப்­பட்டார். 



முறைப்­பாடு செய்­தி­ருந்த கடை உரி­மை­யாளர் ரஹ்­மத்­துல்லா சந்­தேக நப­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டா­மெ­னவும், இதன் பிறகு மஹி­யங்­க­னையில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம் பெற்றால் அதற்­கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். பொலிஸார் இரு தரப்­பி­ன­ரையும் சமா­தானம் செய்து வைத்­தனர். 



இதே­வேளை எரி­யூட்­டப்­பட்ட ரிச் சூ உரி­மை­யாளர் காத்தான் குடியைச் சேர்ந்த அலியார் தாஜு­தீனும் நேற்று மஹி­யங்­கனை பொலி­ஸுக்கு சென்­றி­ருந்தார். இர­சா­யன பகுப்­பா­ளரின் அறிக்­கையைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்பே இது தொடர்பில் கருத்து வெளி­யிட முடி­யு­மென பொலிஸார் தெரி­வித்­தனர். 



கடந்த வெள்­ளிக்­கி­ழமை எரிக்­கப்­பட்ட ‘ரிச் சூ பெலஸ்’ உரிமையாளர் காத்தான்குடியைச் சேர்ந்த அலியார் தாஜுதீன் மற்றும் ரோயல் ஜுவலரி நகைக்கடை உரிமையாளர் ரஹ்மத்துல்லா அகியோர் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக நேற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.