Header Ads



இந்திய அணியின் பயிற்சியாளர், பதவியை நிராகரித்த மஹேலா

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனே.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அண்மையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். கேப்டன் விராட் கோலிக்கும் கும்ப்ளேவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளாராகும் வாய்ப்பை நிராகரித்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்தனே. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த அழைப்பால் மிகவும் உற்சாகமடைந்தேன், ஆனால் முழுநேரப் பொறுப்புகளை வகிக்க இப்போது எனக்கு விருப்பமில்லை. லீக் போட்டிகளில் பயிற்சியளிக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா டைட்டனஸ் ஆகிய அணிகளின் மீதுதான் என் கவனம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.