Header Ads



கட்டாருக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டால், கட்டுரை எழுதினால் சிறைத்தண்டனை


கட்டாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செய்திகளை வெளியிட ஐக்கிய அரபு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவ்வாறு விதிக்கப்பட்ட தடையை மீறுவோருக்கு எதிராக 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அரபுலக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கட்டார் மீது எந்தவித அனுதாபத்தையும் அல்லது ஐக்கிய அரபு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்க்கும் வகையில் சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு எழுதப்பட்டால் அவர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டமா அதிபர் Hamad Saif al-Shamsi தெரிவித்துள்ளார்.

கட்டாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்டுரை எழுதுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 டிராம் அபராதம் விதிக்கப்படும் என அரபு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கட்டாருக்கு எதிராக வளைகுடா நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு வழங்கியிருந்தார்.

எனினும் வளைகுடா நாடுகளுக்கிடையில் ஒற்றுமை காணப்பட வேண்டும் எனவும், அதற்கான அவசியத்தை ட்ரம்ப் சவூதி அரேபிய மன்னர் சல்மானிடம் தொலைபேசி வழியாக குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 comments:

  1. Foxes looks the separation of sheep one by one to eat.

    Who ever have got mistake... correct them for the sake of Allah and join the Jamath by holding on to the rope of Allah and leave worldly gains for the sake of Islamic unity.

    Ya Allah guide our leaders to be close brother in all means.

    Let us leave all hate speech over any muslim country over this issue but keep our hand raised for them and us.

    ReplyDelete

Powered by Blogger.