June 07, 2017

'முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல், செவிடன் காதில் ஊதிய சங்கு'

முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­ப­டும்­போது, காப்­பு­றுதி தொகையைப் பெறு­வ­தற்­காக உரி­மை­யா­ளர்­களே தீ வைத்துக் கொள்­கின்­றனர் என சட்­டத்தை நிலை­நாட்டும் அதி­கா­ரிகள் கூறு­கின்றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­களை முறை­யிட்­ட­போதும் செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்றே நிலைமை உள்­ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்­றஞ்­சாட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்ற செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீவா தீர்­மானம் குறித்த சபை ஒத்­து­ழைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­வத்தில் கலந்து கொண்ட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஜெனீவா தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வரு­டமும் ஒன்­பது மாதங்­களும் நிறை­வ­டைந்­துள்­ளன. இக்­காலப் பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்கள் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்­க­வேண்டும். நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அரசு எதிர்­கொண்ட சவால்கள் பற்­றியும், கடந்­து­வந்த பாதை பற்­றியும் ஆய்­வு­செய்ய வேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கப்­ப­டுத்­து­வது, பொறுப்புக் கூறலை உறு­திப்­ப­டுத்­து­வது என்ற தொனிப்­பொ­ரு­ளி­லேயே ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. எனவே, இவ்­வி­ட­யத்தில் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உறு­தி­யாக இருக்­கின்­றது. 

இங்­குள்ள சகல தீர்­மா­னங்­க­ளுக்கும் ஒரே தலைப்­புத்தான் வழங்­கப்­பட்­டுள்­ளன. நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் ஆகிய தலைப்­புக்­களே காணப்­ப­டு­கின்­றன. இந்த விட­யங்கள் தொடர்பில் தான் சில அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. 

சிலர் சட்­டங்­களில் இருந்து வதி­வி­லக்­கினைப் பெற்­றுக்­கொள்­கின்­றார்கள். அதற்கு இட­ம­ளிக்­க­கூ­டாது அடுத்து எவ்­வா­று முன்­னோக்கிச் செல்­லப்­போ­கின்றோம் என்று சிந்­திக்க வேண்டும். சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்டு எப்­படி பய­ணிக்கப் போகின்றோம் என்று சிந்­திக்க வேண்டும்

அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் இடம்­பெற்­று­வரும் சுழ்­நி­லையில், மத ரீதி­யான சகிப்புத் தன்­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான விட­யங்­களும் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். நாட்டில் தேவை­யற்ற குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்கும் தரப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கமும், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­களும் விரைந்து நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சியம். 

சில சக்­திகள் நாட்டில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன. இந்த சக்­திகள் தற்­பொ­ழுது வெறுக்­கத்­தக்க பேச்­சுக்­களை பரப்பி வரு­கின்­றன. இத­னுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர். இன்று வெ ளியா­கி­யுள்ள (நேற்று) வீர­கே­சரி பத்­தி­ரி­கையின் தலைப்­புச்­செய்­தியில் மூன்று பௌத்த அமைப்­புக்கள் மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருக்­கின்­றது. இவ்­வா­றான வெறுப்பை ஏற்­ப­டுத்தும் பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

நுகே­கொட விஜ­ய­ராம பகு­தியில் முஸ்லிம் ஒரு­வரின் வர்த்­தக நிலை­யம் தீயி­டப்­பட்­டுள்­ளது. சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவர் தீயிட்­டு­விட்டு ஓடிச் செல்­வது சீ.சி.ரி.வி கம­ராக்­களில் பதிவாகியுள்ளன. இவ்வாறிருக்கையில் உரிமையாளர் காப்புறுதியைப் பெறுவதற்காக தனது கடைக்கு தீயிட்டுக் கொண்டதாக சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது 

ஏத்தனையோ சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றபோதும் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்காமலிருப்பதானது, செவிடன் காதில் ஊதிய  சங்காக காணப்படுகின்றது என்றார். 

4 கருத்துரைகள்:

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் தலைவர்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதும் இதற்கான ஏற்பாடுகளை மு கா மேற்கொள்ள வேண்டும் என்பதாகவே ஒலிக்க , அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது என்பதை தலைவா நீங்களும் உணர வேண்டும்.
காலம் எப்போதுமே கனிந்துதான் இருக்கும் என்றும் மனப்பால் குடிக்காதீர்கள். துட்டகெமுனு என தன்னை அடையாளப்படுத்திய MR ஆட்சி அதிகாரமின்றி புழுவாய் துடிப்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. எனவே காலத்தை வீணடிக்காது ஒன்றிணைவது பர்ளு ஐன் ஆகும்.
ஞானசார கூட்டத்துடன் இந்துக் காவியும் ஒன்றிணைந்திருப்பதும் நாம் எதிர்பார்த்ததுதான். இருப்பினும் இப்புற்று நோய்க்கு இப்போதே மருந்து கட்டுவதாயின் எமது ஒற்றுமை இன்றியமையாததாகும். இது உங்கள் கையாலேயே உள்ளது.

நா

இது எங்கள் ஹக்கீம் கட்சிக்காரர்களுக்கு விளங்காதே!

Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits (https://www.colombotelegraph.com/index.php/slmc-is-falling-down/) The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them are well taken care of to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. The ungrateful Muslim politicians who benefited the most are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders HAVE stage dramas by releasing "press statements" because all of them have DECEIVED THE MUSLIM COMMUNITY for their personal benefits. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they HAVE ALL COVERED UP THE TRUTH ON BEHALF OF THE YAHAPALANA GOVERNMENT TILL NOW. “The Muslim Voice” WARNED the Muslim Community of this in the run-up to the Presidential Elections and the General Elections of 2015. The above article in Colombotelegraph.com has proved that “THE MUSLIM VOICE” was correct then and now – Alhamdulillah. So now all the TRUTH has been COVERED up and the Muslims have been told a "LONG STORY throughout. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER, NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam – Convener “The Muslim Voice”.

Ivanugalum poiyangal than.Allahwin thandanayai payandu kollungal

Post a Comment