Header Ads



''மாணவர்கள் ஆயுதங்களை ஏந்தக் கூடும்'' என்பது தொடர்பில் விசாரணை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க முன்னாள் செயலாளரது கருத்து குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் ஆயுதங்களை ஏந்தக் கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் டொக்டர் நவின் டி சொய்சா தெரிவித்திருந்தார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற டொக்டர் நவீன் டி சொய்சா, கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மாணவர்கள் ஆயுதம் ஏந்த நேரிடும் என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. Very weak biceps and arms

    ReplyDelete
  2. இந்தக்கருத்தினை கேட்ட உடனேயே போலீஸ் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,வேறொருவர் முறைப்பாடு செய்யும் வரை காத்திருத்தல் அழகல்ல,

    ReplyDelete

Powered by Blogger.