Header Ads



சவுதி அரேபியர்களின் செயல், துருக்கி என்ன செய்யப் போகிறது..?

-Dilshan Mohamed-

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி #குர்திஸ்தான் என்ற #சுதந்திர_நாடு ஒன்று ஈராக்கில் உருவாவதற்குரிய சர்வஜன வாக்கெடுப்பி நடத்தவிருப்பதாக ஈராக்கில் சுயாற்சியை அனுபவிக்கும் குர்திஸ்தான் பிராந்திய அரசு (KRG) அறிவித்திருக்கிறது.

குர்தியர்கள் அனைவரும் சுதந்திர தேசத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அதாவது மத்திய கிழக்கில் குர்திஸ்தான் என்ற புதிய தேசம் உருவாகப்போவது கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

இந்த தேசத்தின் வடக்கு எல்லையாக துருக்கியும், கிழக்கு எல்லையாக ஈரானும், தெற்கு எல்லையாக ஈராக்கும், மேற்கு எல்லையாக சிரியாவும் இருக்கும். அதேநேரம் கடல் எல்லையற்ற Landlock நாடாக இருக்கும்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஏற்கனவே எறிந்துகொண்டிருக்கும் தீயில் எண்ணையை ஊற்றும் என்பது மட்டும் உறுதியாக கூறமுடியும். ஈராக்கிய அரசுடன் எல்லைகளை வகுத்துக்கொள்வது தொடர்பில் ஒரு நேரடி மோதல் வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

குர்திஸ்தான் உருவாவது துருக்கி, ஈரான் மற்றும் ஈராக்குக்கு நீண்டகால சிக்கலை கொண்டுவரும் என்பதும் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்ற நினைப்பில் சவுதி அரேபியர்கள் குர்திஸ்தானுக்கு #SaudiWithKurdistan என்ற hashtag ஊடாக வாழ்த்து சொல்ல ஆரம்பித்திருப்பதால் Twitter இது trend ஆகியிருக்கிறது.

சதாமுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்ததன் பிண்ணனியில் ஈராக்கை ஆக்கிரமித்தன் பின்னர் ஈராக் குர்துகளுக்கு சுயாற்சியை USA வழங்கியது. இப்போது அந்த சுயாற்சியை மூலதனமாக வைத்து அமையப்போகும் சுதந்திர தேசத்திற்கும் ஆதரவு வழங்குகின்றனர்.


2 comments:

  1. குர்திஸ்தான் உருவாகிவிட்டால், தற்கால முஸ்லிம் உலகில் காணப்படுகின்ற பெரும்பாலான மோதல்கள் முடிவுக்கு வரும். அதன் தோற்றம் ஆரோக்கியமான ஒன்றே. தற்போதைய தேச எல்லைகள் குர்து இன மக்கள் பரம்பலை ஈராக்கிற்கும் ஈரானுக்கும் துருக்கிக்கும் சிரியாவிற்கும் துண்டாடுவதன் மூலம் அந்நான்கு நான்கு நாடுகளிலும் அவர்களை சிறுபான்மையாக்குகிறது. புதிய தேசத்தின் உருவாக்கம் அவ்வின மக்களின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அவர்களுக்கு மீள வழங்கும்

    ReplyDelete

Powered by Blogger.