Header Ads



இலங்கை கிரிக்கட் சிங்கங்களுக்கு..!

உங்களின் ரசிகர்களில் ஒருவன் எழுதிக் கொள்வது. முதலில் ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன். நீங்கள் வென்றாலும் தோற்றாலும் நாங்கள் என்றும் உங்களுடன்தான்.

மேலும் நீங்கள் தோற்றால் உங்கள் வீட்டுக்கு முன் நின்று கோசம் எழுப்பி வீட்டுக்கு கல்லெறியும் விளக்கெண்ணைய்கள் நாங்களல்ல.

நீங்கள் தோற்றால் வீதி வீதியாக கொடி பிடித்துச் சென்று ஆர்ப்பாட்டம் செய்யும் அரைக்கிறுக்கர்களும் நாங்களல்ல.

மேலும் நீங்கள் தோற்றால் நடுவீதியில் நின்று உங்களது கொடும்பாவிகளை எரித்து அதில் சந்தோஷப்படும் புத்தி மழுங்கியவர்களும் நாங்களல்ல.

ஏனெனில் நாங்கள் இலங்கையர்கள். மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை விரும்புபவர்கள்.

இனங்களுக்கு அப்பாற்பட்டு இலங்கையை நேசிப்பவர்கள். எனவே மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.

நீங்கள் வென்றாலும் தோற்றாலும் நாங்கள் என்றும் உங்களுடன்தான்.

இப்படிக்கு இரண்டு கோடி இலங்கையர்களில் 

ஒருவன் Ahmed Fayas

No comments

Powered by Blogger.