June 12, 2017

குர்ஆன் வசனத்தை கூறி, கட்டார் நிலவரத்தை சொன்ன எர்துகான் - இப்தார் நிகழ்வில் நெகிழ்ச்சி

-Mohamed Basir-

இப்தார் நிகழ்வொன்றில் துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் ஆற்றிய உரை

எமது புஜங்களில் சுமத்தப்பட்டுள்ள பணி சத்தியத்தின் பாதையில் பயணிக்கிறது. எம்மிடம் தேவைகளை கோருபவர்களுக்கு உதவி செய்துகொண்டு எமது பயணத்தை நாம் பூரணப்படுத்துவோம்.

அநியாயம் இழைக்கப்பட்டவனிடமிருந்து வரும் அபயக்குரலை ஒருபோதும் இலகுவாக தட்டிக்கழித்து விடாதீர்கள். ஏனெனில் அது பல மடங்காகப் பெருகி உங்களுக்கே திரும்பிவரும்.

கட்டார் சிறியதொரு நாடு என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் அது சரியானதல்ல. மீண்டும் சொல்கிறேன். அது சரியானதொன்றல்ல. பின்வரும் அல்குர்ஆன் வசனம் அதனை மிகத் தெளிவாக சொல்கிறது.

“எத்தனையோ சிறிய குழுக்கள் பெருந்தொகையானோரைக் கொண்டிருந்த குழுவினரை அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கொண்டுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” (அல்-பகறா -249).

எனவே எம்மிடமுள்ள முழு சக்தியையும் சுமந்தகொண்டு இப்பாதையில் நடைபயில்வோம்.

பிராந்திய மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கவோ, புதிய சுமைகளை சுமக்கவோ நாம் அனுமதிக்கக் கூடாது.

துருக்கி என்ற வகையில் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அதன் பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றின் பக்கமே நாம் நிற்போம்.

வேறுபாடுகள் பார்க்காமல் எமது சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படும் தடைகளை நீக்க, அவர்களுக்கு மத்தியிலுள்ள இணை நலன்களை நிறைவேற்ற நாம் எப்போதும் போராடுவோம்.

இன்று நாம் அந்த நோக்கத்தை நிறைவேற்றவே முனைகிறோம். மனிதர்கள் என்றவகையில் நாம் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்ற முயற்சிக்கிறோம். அது என்ன கட்டளை தெரியுமா?

சூறதுல் ஹூஜுறாத்திலே அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்கள் சகோதரர்கள். அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தி வையுங்கள்". இதுபோன்ற தருணங்களில் அதனை மேற்கொள்ளுமாறு அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகிறான்.

இங்கிருந்துதான் எமது பணி ஆரம்பிக்கிறது. கட்டார் நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக ராஜதந்திர ரீதியிலான செறிவான நடவடிக்கைகளில் நாம் இறங்கியிருக்கிறோம்.

பதின்மூன்றிற்கு அதிகமான தலைவர்களை நான் சந்தித்திருக்கிறேன். 

வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும் எமது சார்பில் பேசவல்ல அதிகாரிகளும் அவர்களை சந்தித்துள்ளனர்.

எமது முயற்சிகளுக்கான விளைச்சலை மிக விரைவில் நாம் காண்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

பெரும்பாலான முஸ்லிம்களை பாதிக்கின்ற பயங்கரவாத நிறுவனங்களின் திட்டங்களை எந்த வகையிலேனும் முறையடிக்க நாம் உடன்பாட்டுடன் பணியாற்றுவது எம்மீது கடமையாகும். கருத்துவேறுபாட்டுடனோ, முரண்பாட்டுடனோ அதனை அடைய முடியாது.

எமது தூதர் (ஸல்) அவர்கள் “இணைந்து பணியாற்றுவது ஒரு அருள். பிரிவினை ஒரு வேதனை” எனக் கூறியிருக்கிறார்கள்.

எமது தூதரின் உபதேசத்தை நாம் பின்பற்றுவது கடமையாகும். குறிப்பாக நாம் இப்போது வாழும் இந்த அருள்பொருந்திய நாட்களில் இது மிக விசேடமானதாகும்.

6 கருத்துரைகள்:

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
(அல்குர்ஆன் : 3:103)

மாஷாஅல்லாஹ்,மிக காத்திரமான நடவடிக்கை,

மாஷா அல்லாஹ் இவரின் முயற்சி நிறை வேற நாம் அல்லாஹ்வை பிரார்த்திப்மோம்.

Masha allah arumayana speech

எல்லானும் இப்படித்தான் ஏமாதுரான்கள்.ஒரு பக்கம் இஸ்ரேல் எம்பசி வெச்சு ஆக்கிரமிப்பப ஏற்றுக்கொல்ஹிரான்கள்,மறுபக்கம் பாலஸ்தீன விடுதலைக்கும் சப்போர்ட் பண்றாங்கள்.முனாபிக்குகளினால் தான் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை.

குர்ஆன் ஹதீஸ் என்ற இஸ்லாமிய மூலாதாரங்களை தமது யாப்பு எனப் கூறி அரசியல் செய்யும் எமது முஸ்லிம் கட்சியினருக்கு சிறந்த முன் உதாரணமாக எரதுகானின் உரை அமைந்துள்ளது.
1928 இழந்த உஸ்மானிய பேரரசு மீண்டும் துருக்கியின் தலைமைத்துவத்தில் ஏற்படுத்த அல்லாஹ் துணைபுரிய துஆ செய்வோம்.
அரபுலக மன்னர்கள் தமது இருப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கருத்தாயுள்ளனர. மாறாக தமது மக்களினதும் இஸ்லாமிய சமூகத்தினதும் நலன்களில் எவ்வித அக்கரையுமின்றி காணப்படுகின்றனர்.
இவர்களது வரட்டு கௌரவத்தை விட்டு வெளியேறி துருக்கியின் சாணக்கியமான பலமான தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைகின்றபோதே இஸ்ரேலிய அமெரிக்க யூத நசறானியரது இயல்பான அச்சம் திடுக்கமாக மாற்றமடையும்.
அவர்களிடமுள்ள நரிப் பயம் காரணமாகவே எங்களை அவர்கள் பிரித்தாளுகின்றனர். எனவே இச்சூழ்ச்சியிலிருந்து விரைவாக வெளியேறி முஸ்லிம்களிம் நாடுகள் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடிப்பது அவசியமாகும்.

Post a Comment