Header Ads



டிரம்பின் பயணத் தடைக்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத் தடையை பகுதி அளவு அமுல்படுத்துவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பின் வெற்றி என டிரம்ப் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இதில் அகதிகள் தடைக்கான வெள்ளை மாளிகையின் கோரிக்கையை அமுல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும் ஜனாதிபதியின் கொள்கையை உறுதி செய்வது அல்லது நிராகரிப்பது தொடர்பில் வரும் ஒக்டோபரில் ஆலோசிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.

ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 90 நாள் பயணத்தடை விதிக்கவும், அகதிகளுக்கு 120 நாட்கள் தடை விதிக்கவும் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடைகளுக்கு திங்களன்று நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து அவை 72 மணி நேரத்திற்குள் அமுலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி வரும் வியாழக்கிழமை காலை தொடக்கம் சிரியா, ஈரான், சோமாலியா, சூடான், லிபியா மற்றும் யெமன் நாட்டவர் அமெரிக்கா வருவது 90 நாட்களுக்கு தடுக்கப்படுவதோடு நாட்டின் தேசிய அகதிகள் திட்டமும் 120 நாட்களுக்கு முடக்கப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.