Header Ads



ஊடகவியலாளர் மீது, பாய்ந்த அமைச்சர் (வீடியோ)

கெரவலப்பிட்டிய பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

கந்தானையிலுள்ள கட்சி அலுவலகத்தில் அமைச்சருடன் மக்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பிரச்சினை குறித்து பிரதேசவாசிகளால் கடிதமொன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், வத்தளை – போப்பிட்டிய பகுதியில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

ஊடகவியலாளர்: அமைச்சரே.. வத்தளை போப்பிட்டிய பகுதியில் இதற்கு முன்னர் குப்பை கொட்டப்பட்டது. அப்போதும் உங்கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. நீங்கள் எதனையும் கூறவில்லை. அது சம்பந்தமாக எதையும் கவனிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வத்தளைக்கே குப்பைகள் கொண்டுவந்து கொட்டப்படுவது ஏன்?

அமைச்சர் ஜோன் அமரதுங்க: நான் இல்லை என்றால் அதற்கு அப்பால் கொண்டு வந்தது யார் என்று உமக்குத் தெரியாதா? பொய் சொல்லாதே. சாகடிப்பேன் பார்த்துக்கோ….

ஊடகவியலாளர்: அமைச்சரே உங்கள் மீதே குற்றச்சாட்டு உள்ளது.

அமைச்சர் ஜோன் அமரதுங்க: மக்கள் சொல்வது எனக்குத் தெரியும். இதற்குப் பின்னர் இந்த வாயிலைக் கடந்து உள்ளே வரவேண்டாம். தயவுசெய்து செல்லுங்கள். இவ்விடத்திலிருந்து வெளியே செல்லுங்கள்… இங்கு கேள்வி கேட்டுவிட்டு, சென்று தேவையற்றதைப் போடுவார்கள். அவசியமான கேள்வி ஒன்றைக் கேளுங்கள். அதற்குப் பதிலளிக்கிறேன். முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்.

No comments

Powered by Blogger.