June 15, 2017

ஜனாதிபதி, பிரதமரின் பெருந்தன்மை - முஸ்லிம்களே, இப்தார்களை புறக்கணிக்காதீர்கள்..

இப்தார் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்துவது ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்றல்ல. காலா காலமாக இந்த நாட்டின் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்ற போது இப்தார் நிகழ்வுகளையும் நடாத்திக்கொண்டு வந்திருக்கின்றனர். இவ்வாறான ஓர் நிலைமையில் முஸ்லிம்களுடைய சமய உணர்வுகளையும், நோன்பு கால வழிபாடுகளையும் அரசாங்கமும், ஆட்சியாளர்களும் அங்கீகரித்து அதில் அவர்களும் பங்கேற்று பரவசமடைகின்றார்கள் என்பதனை வெளிக்காட்டுகின்ற நிகழ்வுதான்  ஜனாதிபதியினாலும், பிரதமரினாலும் ஒழுங்கு செய்யப்படுகின்ற இப்தார் வைபவங்களாகும். இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி நாட்டில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது இவர்களின் பெருந்தன்மையையே வெளிக்காட்டுகின்றது என அக்கரைப்பற்று மாநாகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், சிறிலங்கா காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

நமது ஜனாதிபதியும், பிரதமரும் நடாத்தவிருக்கின்ற இவ்வருட இப்தார் நிகழ்வுகளில் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளக்கூடாது எனும் ஒரு விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.  இவ்விடயம் தொடர்பில்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் - இதனைப் புரிந்து கொள்ளாது, சட்டபூர்வமான ஓர் அரசாங்கம் நடாத்துகின்ற நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூகவலைத்தளகங்களில் எதிரான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஓர் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை.

இப்தார் நிகழ்வை புறக்கணிக்க சொல்லப்படுகின்ற காரணம் சரியானதா என்பதை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் விரோத செயற்பாடுகளை மேற்கொள்வோர் அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற அழுத்தங்களின் ஊடாக அடைந்து கொள்ள துடிக்கின்ற வெற்றிகளுள் ஒன்றாக இந்த விவகாரம் சிலவேளை மாற்றம் பெறவும் வாய்ப்புள்ளது என்பதையும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.  நமது நாட்டில் தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இன வன்முறைச் செயற்பாடுகள் மிகுந்த வேதனைக்குரியதாகும். எனவே அவற்றைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் அரசின் தார்மிகக் கடமையாகும். இருப்பினும் இதனை 'இப்தாருடன்' முடிச்சுப் போட்டுக் கொள்வது எமக்கு வெற்றியையோ விமோசனத்தையோ தருவதற்குப் பதிலாக எதிர் மறையான முடிவுகளை கொண்டு வந்து விடுமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

எமக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளை எடுத்து உரத்துப் பேசுகின்ற இடங்களாக பாராளுமன்றத்தையும், அமைச்சரவையையும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றங்களையும் நாம் தேர்ந்து கொள்ளவேண்டும். துணிகரமாக கருத்துக்களைச் சொல்லி, தீர்வினை பெற்றுக்கொள்ள தம்மால் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் மக்களாகிய நாம் தயார்படுத்துதல் வேண்டும். அந்த உயரிய சபைகளில் தீர்வு எட்டப்படாது போகுமானால் மக்களும், மக்கள் பிரதிநிதிகளுமாக ஒன்றித்து சில முடிவுகளின் பால் நகரவேண்டும்.  இப்தார் போன்ற முஸ்லீம்கள் மேற்கொள்ளும் சமயரீதியான விவகாரங்களில் அரசாங்கம் காண்பிக்கின்ற நல்லெண்ணத்தை சீர்குலைக்க எத்தனிக்கின்ற தீய சக்திகளுக்கு தீனி போடும் விதமாக நாம் நடந்துவிடக்கூடாது. 

கடந்த அரசாங்க காலத்தின் போதுதான் இவ்வாறான இனமுரண்பாட்டு நடவடிக்கைகளும் வெறுப்பூட்டும் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டு மிக உச்சக் கட்டத்தை அடைந்திருந்தன. ஆனாலும், அப்போதைய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் போன்ற முக்கிய ஆட்சியாளர்களின் 'இப்தார்' வைபவங்களுக்கு நாம் எந்தவித எதிர்ப்புக்களையும் காண்பிக்கவில்லை.  எனவே எமக்கு ஏற்பட்டுள்ள துயரமான நிலையில் இருந்து நமது சமூகத்தினைபாதுகாத்துக் கொள்ள தூர நோக்குடனும், தெளிவான சிந்தனையுடனும் நாம் பயணிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும் என்றும் மேலும் கூறினார்.
(சப்றின்)

12 கருத்துரைகள்:

your wrong brother Haneefa, if they are really respect our religion and our muslim community they do not allow racist to trouble us, so this all just for the political move. we should boycott. since your SLMC member you are thinking the way your poor leader think

unga thalaivar parlimentla kilichchathu poathumya!!! summa pammathu kaataama pongaiyya!!!!

எதிரிடம் கெஞ்சிநானும் துரோகியிடம் கெஞ்சக் கூடாது.

முஸ்களை மதித்து உங்களுக்கு கஞ்சி காய்ச்சி தரவில்லை உங்களை போன்ற ஏமாளிகளை ஏமாற்றி ஆட்சியை நடத்தும் தந்திரம்தான் இது,பிரதேச சபையிலேயே தோல்வி கண்ட வேட்பாளர் அவர்களே.அந்த இப்தாருக் முஸ்லிம் நாட்டு இராஜ தந்திரிகளும் வருவார்கள் இவ்வாறு நிகழ்ச்சியை கண்டால் அரசாங்கம் முஸ்லிம்கள் மீது பொறுப்போடு இருக்கிறது என்று நினைத்து நம்மீது உள்ள கரிசனை குறைந்து விடும்,உங்களைப் போன்ற சுயநல மடையர்களால் அரசியலுக்கு அப்பால் இருக்கும் கௌரவாமான புத்தியுள்ள புத்தி ஜீவிகள் வெட்கித் தலை குனிகின்றார்கள்,

The matter of the fact is , Muslims have so far
been very patient . Muslim MPs and minsters have
made every reasonable effort to bring the
situation under control and the government has
taken positive steps to protect Muslims and their
properties although there were hurdles and it
took time . Gnanasara is dangerous but the law
and order chased him out into hiding.One criminal
is already under arrest and being questioned .
The cabinet ministers have voiced their concern
strongly against Gnanasara . These are all very
positive steps thanks to social media , our
leaders , some creative media and on top of all
that GREATER MUSLIM PUBLIC PRESSURE ON ALL THE
RELEVANT AUTHORITIES FOR IMMEDIATE ACTION !
NOW , NOBODY SHOULD REST UNTIL FULL JUSTICE IS
DONE AND FUTURE IS SECURE . TAKEN ALL THESE
INTO ACCOUNT , MUSLIMS SHOULD BE ABLE TO TAKE
PART IN THE IFTHAR HOSTED BY THE LEADERS OF OUR
COUNTRY WHO ARE NOT MUSLIMS , WITH SOME
SATISFACTION . LET US ACHIEVE MORE BY
PARTICIPATION . THEY KNOW WE ARE A GREAT
COMMUNITY .

Mr. Haneefa if you want my3 Kanchi you can go and participate with them, but do not try other Muslims to be joint with you. This all drama. Then you also member of BBS?

Pls Mr. Haneefa avoid like these foolish article

சரியாகக் சொன்னீர் ஜவ்பர்

A VALUABLE ADVICE TO SRI LANKAN MUSLIMS, Insha Allah.
”The powerless should not accept their powerlessness. They may not succeed in getting power but they can fight for it, and if enough fight for it, it makes it very difficult for the people with the big sticks.”
Jane Jacobs . American-Canadian journalist, author, and activist.
IF you belong to the SLMC/Rauf Hakeem, you too are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".


A VALUABLE ADVICE TO SRI LANKAN MUSLIMS, Insha Allah.
”The powerless should not accept their powerlessness. They may not succeed in getting power but they can fight for it, and if enough fight for it, it makes it very difficult for the people with the big sticks.”
Jane Jacobs . American-Canadian journalist, author, and activist.
IF you belong to the SLMC/Rauf Hakeem, you too are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".


As salaamu alaikum,

Valamai pontru engavathu thodangi ethaiyaavathu peseum neengal... arasiyalil enna vera mathiriyaa pesuveerkal? Ungalukku oru arasiyal intha thallatha vayathil thevayaa? Unkalipontra varkalin pammathu arikai vittahu pothum......
Ungal vayathukkuthaan maryaathai.

Post a Comment