Header Ads



'அரசாங்கத்திற்கு சோகை, நோய் ஏற்பட்டுள்ளது'

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 12ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு சோகை நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் ஏற்பட்டவருக்கு தான் என்ன செய்கிறேன் என்பது புரியது.

இப்படியான அரசாங்கங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ததாக உலகில் எங்கு குறிப்பிடப்படவில்லை.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு மக்கள் பொறுப்புக் கூறவேண்டும். திருடர்கள், ஊழல்வாதிகள் என அறிந்தே மக்கள் அப்படியான நபர்களுக்கு தேர்தலில் வாக்களித்தனர் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இலங்கையின் அரசியலில் அதிகமானவர்கள் இத்தகைய சோகை நோயைக்கொண்டிருப்பது அதிகாரத்திற்கு வந்தபின்னர் தானே தெரியவருகிறது. இது ஒரு புற்றுநோய். இதற்கான மருந்தை மக்கள் கண்டுகொள்ள இன்னும் எத்தனை தசாப்தங்கள் தேவையோ? இலங்கையின் தலையெழுத்து?

    ReplyDelete
  2. Totally bad luck country.first reason it buddhist monk dominting the govt.it is very bad sign

    ReplyDelete

Powered by Blogger.