Header Ads



எல்லோருக்கும் கிடைக்குமா, இது போன்ற பரிசு..?


நடுவானில் 35,000 அடி உயர விமான பயணத்தின் போது பிறந்த ஆண் குழந்தைக்கு பரிசாக இலவசமாக ஆயுட்காலம் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறப்பதற்கான பாஸ் வழங்கி அசத்தி இருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது நடந்த முதல் பிரசவம் என்பதால் இதை மகிழ்ச்சிகரமான பரிசு என்று அறிவித்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.  

ஜெட் ஏர்வேஸ்

சவுதி அரேபியாவில் உள்ள டமாம் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (18.06.2017) கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் போயிங் 737 விமானம் 162 பயணிகளுடன் கிளம்பி இருக்கிறது. இந்த ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணம் செய்திருக்கிறார்.

விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது கர்ப்பிணி பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தில் விமானப் பணிப்பெண்களும், விமானத்தில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த செவிலியர் வில்சனும் பிரசவம் பார்க்க கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. உடனே இந்தச் செய்தியை விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க, விமானம் மும்பையில் தரையிறங்க அனுமதித்து இருக்கிறார்கள். தற்போது, தாயும், சேயும் மும்பை விமான நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இருவரும் நலம் என்று அறிவித்து இருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். எல்லோருக்கும் கிடைக்குமா இது போன்ற பரிசு?

No comments

Powered by Blogger.