June 10, 2017

'மஹிந்த அணியினர் அதிகம் துள்ளினால், பெயர் விவரங்களை வெளியிடுவேன்'

மஹிந்த அணியினர் அதிகம் துள்ளினால் அவர்களுக்கு உதவிய மற்றும் காடைத்தனத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுவினரின் பெயர்ப்பட்டியலை வெளியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும்கூறியுள்ளதாவது,

மஹிந்த, ஆட்சியைவிட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்ற பிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மீதொட்டமுல்லகுப்பைமேடு மற்றும் சைட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர் எம்மிடம் விட்டுவிட்டுச் சென்றார்.அதுமாத்திரமன்றி அவர் பெற்ற அளவுக்கு அதிகமான சர்வதேச கடன்களை அடைத்துமுடிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தச் சிக்கல்கள்அனைத்தையும் தாண்டி நாம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் ஆற்றலை நாம் பெற்றோம். மஹிந்தஅணியினர் இது நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.

மஹிந்தவின் வீழ்ச்சிக்குப் பிறகு பாதாள உலகக் குழுவினர் தலைதூக்கிவிட்டனர் என்று இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பாதாள உலகக் குழுவினரின் தேவை எமக்கு இல்லை. இவர்களை வைத்து நாம் தேர்தலில் வெற்றிபெறவில்லை.

ஆனால், மஹிந்த பாதாள உலகக் குழுவினரை எப்படிப் பயன்படுத்தினார்? எப்படிஅவர்களின் உதவியைப் பெற்றார்?எத்தனை குழுக்கள் அவருக்கு உதவின? எவருக்கெல்லாம் அவர்கள் விருந்துபசாரம் நடத்தினார்கள்? போன்ற விபரங்கள் என்னிடம் உள்ளன. அவசியம் ஏற்பட்டால் அவர்களின் பெயர்ப்பட்டியலைவெளியிடுவதற்குத் தயங்கமாட்டேன்.

2008ம் ஆண்டு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைத் தடுப்பதற்காக மஹிந்த பாதாள உலகக் குழுவினரைக் களத்தில் இறக்கியிருந்தார். அவர்கள் எம்மைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தனர்.ஆனால் இன்று இவர்கள் நேர்மையானவர்கள் போல் பேசுகின்றார்கள்.

இவர்கள் அதிகம்துள்ளினால் அந்தப் பாதாள உலகக் குழுவினரின் பெயர் விவரங்களை வெளியிடுவேன். அதுதொடர்பில் எந்தத் தொலைக்காட்சியிலும் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்'' என்று தெரிவித்துள்ளார்.

9 கருத்துரைகள்:

வீராப்பு பேசமல் 21 நாய்களும் தனித்து இறங்குங்கள்

THE MUSLIMS ARE NOW POWERLESS.
”The powerless should not accept their powerlessness. They may not succeed in getting power but they can fight for it, and if enough fight for it, it makes it very difficult for the people with the big sticks.”
(Jane Jacobs . American-Canadian journalist, author, and activist).
"THE MUSLIM VOICE" STATES THAT IF THIS FELLOW (MP MUJEEBU RAHUMAN) HAS THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, MUJEEBU RAHUMAN SHOULD RESIGN IMMEDIATELY WITHOUT CONTINUING TO GIVE PRESS STATEMENT TO DUPE THE MUSLIM COMMUNITY. MUSLIM MP’s SHOULD RESIGN THEIR MINISTER, DEPUTY MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION. ALL MUSLIM MP’s SHOULD RESIGN AND SIT AS A SEPARATE GROUP OF 21 MUSLIM MP's IN PARLIAMENT, INSHA ALLAH. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Do not try to run away by giving press statements MP Mujeebu Rahuma. DO WHAT HAS TO BE DONE NOW, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Do not threaten any one if u have proof just produced to media or relevant law n order departments or to public.
What ever ur government promised on the election it won't happen at all.

வெட்கம் கெட்டவனுங்கள், உன் சமுதாயத்திற்கு நீ சார்ந்திருக்கும் அரசாங்கம் செய்துகொண்டிருக்கும் துரோகத்திற்கு ஒரு முடிவெடுக்கவும்

People are not going to believe you and your God Fathers (My3 & Ranil) any more. Yahapalanaya is counting the days........

ஒருவரது பேச்சு(அடுத்தவரைக் கேவலப்படுத்தும் பேச்சு) அவரது வளர்ப்பை பறைசாட்டும்

சரியா ொன்னீர்கள் உறைக்கிறவனுகளுக்கு உறைக்கும்

Post a Comment