June 11, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை, முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்பு


முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு’ ஆகிய அமைப்புக்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கொழும்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மேற்படி அமைப்புகளின் தலைவர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சரத் விஜேசூரிய ஆகியோருடன் கலாநிதி விக்ரமபாஹு கருணாரத்ன,பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கலாநிதி ஜயதிலக்க டீ சில்வா மற்றும் பெரும்பான்மை சமூகத்தின் முன்னணி ஊடகவியாளர்கள், கல்விமா ன்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். தேசிய ஷூரா சபையின் சார்பில் அதன் நிறைவேற்றுக்குழு மற்றும் செயலக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இனங்களுக்கிடையே முறுகல்களை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வணக்கஸ்த்தலங்கள், பொருளாதார நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு எதிராக இரு சமூகங்களின் புத்திஜீவிகள் இணைந்து பின்வரும் செய்ரபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

சர்வமத/சிவில் அமைப்புகளின் சந்திப்பு ஒன்றை எதிர்வரும் 12/06/2017 அன்று கொழும்பு மெதடிஸ்த கல்லூரியில் நடாத்தல்

இனவாத செயற்பாடுகளைக் கண்டித்து ஊடகவியலாளர் மகாநாடு ஓன்றை 13/06/2017 அன்று நடாத்தல்

பெரும்பான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்திஜீவிகள், கல்வியலாளர்கள்,  சமூக ஆர்வலர்களின்கையொப்பங்கள் பெறப்பட்டு 20/06/2017 அன்று லங்காதீப பத்திரிகையிலும் 22/06/2017 அன் று திவயின, ரிவிர, மவ்பிம ஆகிய பத்திரிகைகளிலும் இனவாதத்திற்கு எதிரான முழுப்பக்க விளம்பர அனுபந்தம் ஓன்றைப் பிரசுரித்தல்

அத்துடன் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், ஊடக அமைச்சர் ஆகியோரையும் இக்குழு இணைந்து சந்தித்திக்கவுள்ளது.

மேலும், இனங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்தி, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் இனவாத,மதவாத சக்திககள் மேற்கொண்டுவரும் பொய்ப் பிரச்சரங்களை முறியடித்து சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் உண்மையான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்குமான ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரம் ஒன்றை கூட்டாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

7 கருத்துரைகள்:

Masha allah good job
May alkah bring peace and harmony
In our beautiful srilanka.so many ABU THALIB IN SRILANKA.WE MUST UNDERSTAND THIS MATTER

மாஷா அல்லாஹ்

தேசிய சூறா சபை எடுத்திருக்கும் இம்முயற்சியானது பாராட்டத்தக்கது. இதனை நீடித்துநிலைத்த இன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முழுமையாக உள்ளடக்கிய தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமாகும்.
பத்திரிகை அனுபந்தங்களுக்கு மேலதிகமாக சிங்கள மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்திவரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களையும் இணைத்துக் கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் பிரதான சமூக வலைத்தள இயக்குனர்களையும் சிங்கள சினிமா பட இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளையும் இணைத்து அவர்களது அனுசரணைகளைப் பெறுவதும் முக்கியமாகும்.
இதன்மூலம் சிறு விளம்பரங்கள் குறும்படம் என்பவற்றை திரையரங்குகளில் ஒலிபரப்ப முடிவதுடன் இனநல்லுறவு அம்சங்களை திரைப்படங்களிலும் உள்ளடக்கிக்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

எல்லாம் நடக்கும்... ஆனால் எதுவும் நடக்காது...

Post a Comment